Saturday, November 1, 2014

Windows 10 தரும் புதிய வசதி

மைக்ரோசொப்ட் நிறுவனம் அண்மையில் Windows 10 இயங்குதளத்திற்கான Technical Preview பதிப்பினை வெளியிட்டிருந்தது.
இதில் Action Cente எனும் டெக்ஸ்டாப்பில் தென்படக்கூடிய Notification பகுதி உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மின்னஞ்சல்கள், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற அப்பிளிக்கேஷன்களிற்கான Notification - களை உடனுக்கு உடன் அறிந்துகொள்ளும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
தேவைக்கு ஏற்றால் மூடும் (Close) வசதியைக் கொண்டுள்ளதுடன், டாக்ஸ் பாரிலிருந்து மீண்டும் செயற்படுத்தும் வசதியும் இந்த Notification பகுதியில் காணப்படுகின்றது.
Windows 10 தரவிறக்கச் சுட்டி

YouTube அறிமுகம் செய்யும் புத்தம் புதிய வசதி

வீடியோ கோப்புக்களை ஒன்லைனில் பகிர்ந்து கொள்ளும் வசதியை வழங்கும் YouTube தற்போது பயனர்களுக்காக புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது வீடியோக்களை பார்வையிடும் போது அவ்வீடியோக்களில் விளம்பரங்கள் இடம்பெறச் செய்வது வழமையாகும்.
இவ்விளம்பரங்களால் பயனர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு அவற்றினை தவிர்த்துக்கொள்ளும் வசதியினை பயனர்களுக்கு வழங்கவுள்ளது.
இத்தகவலை YouTube தளத்தின் தலைமை அதிகாரி Susan Wojcicki தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியிடப்படாத நிலையில் இவ்வசதியினை அனுபவிப்பதற்கு பயனர்களிடமிருந்து பணம் அறவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.