Showing posts with label YouTube. Show all posts
Showing posts with label YouTube. Show all posts

Wednesday, February 28, 2018

மீண்டும் புதிய வசதிகளை சிலவற்றினை அறிமுகம் செய்கின்றது Youtube

Youtube ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருகின்றமை தெரிந்ததே.

இச் சேவையின் ஊடாக மேலும் சில வசதிகளை பயனர்களுக்கு வழங்க Youtube முன்வந்துள்ளது.

இதன்படி Chart Reply வசதி, தான்னியக்க முறையிலான ஆங்கில கேப்ஷன் வசதி, Mobile சாதனங்கள் ஊடான நேரடி ஒளிபரப்பின்போது இருப்பிடத்தினை டேக் செய்தல் உட்பட மேலும் சில வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

இவ் வசதிகள் பிரம்மண்டமான Music Shows  நேரடி ஒளிபரப்பு செய்தல், Games, Science Shows,  Cultural Events மற்றும் Computer Home போன்றவற்றினை நேரடி ஒளிபரப்பு செய்யும் போது பெற்றுக்கொள்ள முடியும்.

தவிர நேரடி ஒளிபரப்பு முடிவடைந்த பின்னரும் இவ் வசதிகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.
iOS மற்றும் Android ஆகிய இரு சாதனங்களிலும் மேற்கண்ட வசதிகள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, November 1, 2014

YouTube அறிமுகம் செய்யும் புத்தம் புதிய வசதி

வீடியோ கோப்புக்களை ஒன்லைனில் பகிர்ந்து கொள்ளும் வசதியை வழங்கும் YouTube தற்போது பயனர்களுக்காக புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது வீடியோக்களை பார்வையிடும் போது அவ்வீடியோக்களில் விளம்பரங்கள் இடம்பெறச் செய்வது வழமையாகும்.
இவ்விளம்பரங்களால் பயனர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு அவற்றினை தவிர்த்துக்கொள்ளும் வசதியினை பயனர்களுக்கு வழங்கவுள்ளது.
இத்தகவலை YouTube தளத்தின் தலைமை அதிகாரி Susan Wojcicki தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியிடப்படாத நிலையில் இவ்வசதியினை அனுபவிப்பதற்கு பயனர்களிடமிருந்து பணம் அறவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.