Showing posts with label எச்சரிக்கை. Show all posts
Showing posts with label எச்சரிக்கை. Show all posts

Thursday, April 27, 2017

ஏடிஎம் கார்டு பயன்படுத்துவீர்களா? இதை கொஞ்சம் படிங்க

 அனைத்து இடங்களிலும் ஏடிஎம் கார்டை பயன்படுத்துவது சாதாரணமாகிவிட்டது.

கடைகளுக்கு சென்றாலும் அங்கு பணம் செலுத்துவதற்கு ஏடிஎம் கார்டைதான் உபயோகிக்கின்றோம்.
ணபரிவர்த்தனைகளுக்கு இது எளிதாக இருந்தாலும் ஆபத்து நிறைந்தது. அனைத்து இடங்களிலும் நாம் கார்டினை பயன்படுத்துவது பாதுகாப்பாக இருப்பதில்லை. எளிதாக நமது வங்கி கணக்கின் விவரங்களை திருடிவிடும் அபாயமுள்ளது.
மால்வேர்(Malware)
மால்வேர் என்னும் மென்பொருளினை பயன்படுத்தி நமது லேப்டாப், கணினி, செல்போன்களில் உள்ள நமது கார்டு பற்றிய தகவல்களை திருடிவிடலாம்.
இதுமட்டுமல்லாது ஏடிஎம்-களில் இந்த மென்பொருளை பதிவேற்றில்விட்டால் அங்கு பயன்படுத்தப்படும் அனைத்து கார்டுகளின் விவரங்களையும் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
குளோனிங்(Cloning)
நமது கார்டினை போன்று புதிதாக ஒரு கார்டினை உருவாக்குவது குளோனிங் எனப்படுகிறது. பி.ஓ.எஸ். என்னும் இயந்திரங்களில் கார்டினை உபயோகிக்கும் போது நமது தகவல்கள் திருடப்பட்டு போலி கார்டுகள் உருவாக்கப்படுகின்றன.
ஸ்கிம்மிங்(Skimming)
ஏடிஎம் இயந்திரங்களில் இரகசிய கேமராவினை பொருத்தி அதன் மூலம் கார்டினை உபயோகிக்கும் போது அதன் ’பின்’ நம்பரை எளிதாக அறிந்து எளிதாக நமது வங்கி கணக்கில் இருந்து பணத்தினை திருடிவிடக்கூடும்.
பிஷிங்(Phishing)
ரிசர்வ் வங்கியில் இருந்து வருவதை போல் உங்கள் மெயிலுக்கு வங்கி கணக்கு எண், கார்டு குறித்த தகவல்கள் கேட்கப்படும். இதற்கு நாம் பதில் அளித்துவிட்டால் உடனடியாக நம் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுவிடும்.
விஷிங், ஸ்மிஷிங்(Wishing and Smishing)
வங்கியிலிருந்து பேசுவதை போன்று யாராவது போன் செய்து உங்கள் வங்கி கணக்கு விவரங்களை கேட்பர். நாம் கூறிவிட்டால் உடனடியாக நம் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுவிடும்.
நமது மொபைல் எண்ணுக்கு ஏதெனும் இணைய தள லிங்க்குடன் மேசேஜ் வரும். நாம் தெரியாமல் அந்த பக்கத்திற்கு சென்றுவிட்டால் உடனே தகவல்களை திருடும் மென்பொருள் மூலம் சில விநாடிகளில் நமது தகவல்கள் திருடப்பட்டுவிடும். இது ஸ்மிஷிங் என்று அழைக்கப்படுகிறது.
இதிலிருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை
ஏடிம் கார்டு, கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதற்கு முன் கவனம் தேவை. கார்டினை பயன்படுத்தி பணம் எடுப்பதற்கும் பரிமாற்றம் செய்வதற்கு வரைமுறை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.
இதன் மூலம் உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டாலும் குறைந்த பாதிப்பே ஏற்படும். இதற்கான வசதியினை பெரும்பாலான வங்கிகள் வழங்குகின்றன.
அடிக்கடி ஏடிஎம் பின் நம்பரை மாற்றி கொள்ளுங்கள். ஓ.டி.பி.(OTP) மற்றும் பின் நம்பரை யாரிடமும் தெரிவிக்காதீர்கள்.

Wednesday, September 11, 2013

எச்சரிக்கை !! PRIYANKA இடம் ஏமாந்து விடாதீர்கள் – தயவுசெய்து படியுங்கள்

‎எச்சரிக்கை :-

Smart Phone களுக்கான WhatsApp Application மூலம் Priyanka எனும் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது. நீங்களும் WhatsApp பாவனையாளர் எனின் சற்று அவதானமாக இருக்கவும். இது Whatsapp மூலமாக உங்கள் மொபைலுக்கு ஒரு Contact வடிவில் வரும்.

இதனை நீங்கள் Contact ஆக சேமித்துவிட வேண்டாம். மீறி சேமித்து விட்டால் இது உங்கள் மொபைலில் தனது கை வரிசையை காட்ட ஆரம்பித்து விடும்.

அப்படி என்னதான் செய்கிறது இத்தீய செய்நிரல்?


priyanka எச்சரிக்கை !! Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள்   தயவுசெய்து படியுங்கள்
இதனை நீங்கள் சேமித்துவிட்டால் உங்கள் Contact இல் சேமித்திருக்கும் அனைத்து இலக்கங்களையும் Priyanka என மாற்றிவிடுகின்றது.

தீர்வு தான் என்ன?

Priyanka என்றோ அல்லது வேறு சந்தேகத்துக் கிடமாகவோ வரும் Contact அல்லது கோப்புக்களை சேமிக்காதீர்கள். தெரிந்தோ தெரியாமலோ அவ்வாறு சேமித்திருந்தால் Settings இல் இருக்கும் Application Manager ஊடாக சென்று WhatsApp Application ஐ தெரிவு செய்து Force stop என்பதனை சுட்டிய பின் Clear Data என்பதனை சுட்டுங்கள் அவ்வளவு தான்.
எது எப்படியோ உங்களது அனுமதியின்றி இதனால் தன்னைத்தானே சேமித்துகொள்ள முடியாது எனவே சற்று அவதானத்துடன் இருப்பதன் மூலம் உங்களை நீங்கள் பாதுகாத்திடலாம்.

Saturday, June 1, 2013

பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக்ரோசொப்ட்



பேஸ்புக்கை தாக்கும் புதிய வகை ட்ரொஜன் ஹோர்ஸ் வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளதால் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. 'Trojan:JS/Febipos' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தன்னியக்கமாக Like, Comment மற்றும் Share செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. தற்போது பிரேஸில் மொழியில் பிரேசில் நாட்டில் அதிகளவில் வியாபித்துள்ள இந்த வைரஸ் ஐரோப்பா நாடுகளுக்கும் விரைவில் ஆங்கில மொழியிலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Firefox, Chrom போன்ற இணைய உலாவிகளின் Plug-ins என்ற போர்வையிலேயே இந்த வைரஸ் பரவுவதாகவும் குறித்த வைரஸ் தாக்கிய கணனியின் மூலம் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் அதிலிருந்து ஓரளவு தப்பிக்கவும் சில வழிகளைக் கூறியுள்ளது. 



அதாவது தரவேற்றம் செய்யக் கூறி புதிதாக Firefox, Chrom ஊடாக வரும் Plug-insகளை தவிர்த்தல் மேலும் பேஸ்புக்கினைப் பயன்படுத்திவிட்டு முறைப்படி அதிலிருந்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. இதேவேளை இந்த வைரஸ் விரைவில் பிரேஸில் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கும் பல மொழிகளில் பரவலடையும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகின்றது

Wednesday, October 24, 2012

இன்ட்லி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!


உங்கள் ப்ளாக்கில் இன்ட்லி Follower Gadget வைத்திருந்தாள் உடனடியாக நீக்கிவிடவும். தற்போது அதில் Gadget-கு பதிலாக ஆபாச படம் தெரிகிறது. தயவு செய்து இதனை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.