Showing posts with label WhatsApp. Show all posts
Showing posts with label WhatsApp. Show all posts

Monday, February 12, 2018

வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் விரைவில் அறிமுகம்

வாட்ஸ்அப் செயலில் தற்போது சோதனையில் இருக்கும் க்ரூப் வீடியோ கால் வசதி விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலில் அவ்வப்போது புது அம்சங்கள் சேர்க்கப்படுவது வழக்கம். க்ரூப் சாட்களில் வீடியோ கால் வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதன் மூலம் க்ரூப்களில் உள்ள அனைவருடனும் ஒரே நேரத்தில் வீடியோ காலில் இணையலாம். இந்த வசதி ஏற்கனவே ஃபேஸ்புக் மெசன்ஜரில் உள்ளது குறிப்பிடத்தக்கது. க்ரூப் வீடியோ கால் வசதி முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படும் என்றும் பின்னர் ஐஓஎஸ் இயங்குதள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, March 12, 2014

android apps அனைத்தும் உங்கள் கணணியில் பயன்படுத்துவது எப்படி?

உங்கள் கணனியில் BlueStacks முலம் android apps அனைத்தையும்  பயன்படுத்த  முடியும். இதனை Windows 7/8/8.1 & MAC OSX இலகுவாக பயன் படுத்தலாம்.


முதலில் Whats apps எப்படி install செய்வது பார்போம்....

Step 1:
BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Step 2:
இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.

Step 3:

உங்கள் Google account  Sign in பண்ணுங்கள்.


Step 4:
"Search"என்பதனை click பண்ணுங்கள்...
Step 5:
Install என்பதனை click செய்யுங்கள் ...

இனி உங்கள் Android Apps பயன்படுத்த உங்கள் Android Phone - ஐ பயன்படுத்த தேவையில்லை. கணணி இருந்தால் மட்டுமே போதும்........ 


அதே போன்று உங்களுக்கு கணணியில் WhatsApp மற்றும் ஏனைய Appsனை பயன்படுத்த முடியும்.........



Friday, February 28, 2014

WhatsApp இல் பேசும் வசதி அறிமுகம்...!


WhatsApp புதிதாக பேசும் வசதி அடுத்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.முதலில் இது, இந்த ஆண்டு 2ம் காலப்பகுத்திற்குல்
(April - June) iPhone மற்றும் Android இற்கு வரும் என அந்நிறுவனம்
மேலும் தெரிவித்துள்ளது!

பிரபல மொபைல் தொழில்நுட்ப சேவையான WhatsApp 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் இந்தச் சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து ஏராளமான புதிய வசதிகளை WhatsApp, ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி வருகின்றன.


அதன் ஒரு பகுதியாக வரும் ஜூன் மாதம் முதல் வாட்ஸ்ஆப் மூலம் பேசும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. முதல் கட்டமாக ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டு, படிப்படியாக பிளாக்பெர்ரி, நோக்கியா, மைக்ரோசாப்ட் போன்களில் அறிமுகம் செய்யப்படும். தற்போது வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் வசதி உள்ளது. ஆனால், அந்த வசதி மூலம் ஒருவரின் தகவலைப் பெற்ற பின்னரே மற்றவர் தகவல் அனுப்ப முடியும். பேசிக்கொள்ள முடியாது.

வைபர் போன்ற தொழில்நுட்ப சேவைகள் மூலமாகவும் பேசவும், தகவல்களை அனுப்பவும் முடியும் என்றாலும் வாட்ஸ்ஆப் சேவையே பெரும்பாலான வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
.