வாட்ஸ்அப் செயலில் தற்போது சோதனையில் இருக்கும் க்ரூப் வீடியோ கால் வசதி விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலில்
அவ்வப்போது புது அம்சங்கள் சேர்க்கப்படுவது வழக்கம். க்ரூப் சாட்களில்
வீடியோ கால் வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வசதி விரைவில்
பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் க்ரூப்களில் உள்ள அனைவருடனும்
ஒரே நேரத்தில் வீடியோ காலில் இணையலாம். இந்த வசதி ஏற்கனவே ஃபேஸ்புக்
மெசன்ஜரில் உள்ளது குறிப்பிடத்தக்கது. க்ரூப் வீடியோ கால் வசதி
முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படும் என்றும் பின்னர் ஐஓஎஸ்
இயங்குதள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment