Friday, February 16, 2018

8K, Chromecast உட்பட மேலும் பல வசதிகளுடன் அறிமுகமாகும் VLC 3.0 மீடியோ பிளேயர்

வருமானம் ஈட்டுவதை நோக்கமாக கொண்டிராத நிறுவனமான VideoLAN இனால் VLC மீடியா பிளேயர் உருவாக்கப்பட்டுள்ளது.
இப் பிளேயரின் புதிய பதிப்புக்களை காலத்திற்கு காலம் அந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.









இந்நிலையில் தற்போது VLC 3.0 எனும் பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.இதில் 8K எனப்படும் மிகவும் துல்லியம் வாய்ந்த வீடியோக்களை பார்த்து மகிழ முடியும்.




VLC 3.0.0 playing 8k60 on Windows 10 using i7 GPU from VideoLAN on Vimeo.




அத்துடன் கூகுளினால் அறிமுகம் செய்யப்பட்ட Chromecast சேவையினையும் இப் பிளேயரில் பெற்றுக்கொள்ள முடியும்.பலதரப்பட்ட சப் டைட்டில்ஸ், ப்ளூ றே மீள்பதிவு என மேலும் பல வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.


அத்துடன் முதன்முறையாக Windows, OS X, Linux, Android, iOS, Windows Phone மற்றும் RT ஆகிய இயங்குதளங்களுக்காக ஒரே தடவையில் VLC மீடியா பிளேயரின் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments: