Friday, February 16, 2018

மீண்டும் முன்னணியில் நோக்கியா கைப்பேசிகள்

சில வருடங்களுக்கு முன்னர் நோக்கியா கைப்பேசிகளுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது.

எனினும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் வீழ்ச்சியை எதிர்நோக்க தொடங்கியது.

அன்ரோயிட் கைப்பேசிகளின் வரவும் வீழ்ச்சிக்கு மற்றுமொரு காரணமாக விளங்கியது.

எனினும் மீண்டும் நோக்கியா நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளத்தினை உள்ளடக்கியதாக ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்ய தொடங்கியது.

இவ்வாறு அறிமுகம் செய்ய ஆரம்பித்து ஓரிரு வருடங்களுக்குள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.


இதனை எடுத்துக்காட்டும் விதமாக கடந்த 2017ம் ஆண்டின் நான்காம் கலாண்டுப் பகுதியில் ஏனைய முன்னணி நிறுவனங்களின் கைப்பேசிகளின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக நோக்கியா கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை காணப்படுகின்றது.


அதாவது HTC, Sony, Google, Alcatel, Lenovo, OnePlus, Gionee,Meizu,Coolpad,Asus ஆகிய நிறுவனங்களை கைப்பேசி விற்பனையில் பின்னுக்கு தள்ளியுள்ளது.

மேற்கண்ட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 4.4 மில்லியன் கைப்பேசிகளை நோக்கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

0 comments: