Apple நிறுவனம் Home Port எனும் சாதனத்தினையும், Amazon நிறுவனம் Alexa சாதனத்தினையும், Google நிறுவனம் Google Home எனும் சாதனத்தினையும் அறிமுகம் செய்துள்ளன.
இவற்றின் வரிசையில் Facebook நிறுவனம் Smart Speaker எனும் சாதனத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.
இலத்திரனியல் சாதனங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் Digitimes இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
July மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இச் சாதனமானது 15 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இதன் ஏனைய சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment