Monday, February 19, 2018

புற்றுநோய் கட்டிகளை அழிக்க நனோ ரோபோக்கள் வெற்றிகரமாக உருவாக்கம்

உடலின் உட்பகுதிகளில் காணப்படும் புற்றுநோய் கட்டிகளை அழிக்கக்கூடிய நனோ வகை ரோபோக்களை வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் விஞ்ஞானிகள்.

அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழகம் மற்றும் National Center for Nanoscience and Technology (NCNST) ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்தே இச் சாதனையை படைத்துள்ளனர்.

குறித்த ரோபோக்கள் புற்றுநோய் கட்டிகளுக்கு வழங்கப்படும் இரத்த ஓட்டத்தினை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளன.


Thrombin-loaded DNA Nanorobot from ASU Biodesign Institute on Vimeo.
 

இவ்வாறு புற்றுநோய் கட்டிகளுக்கான இரத்த ஓட்டம் தடைப்படுவதனால் அவை அழிவடைய ஆரம்பிக்கும்.

மேலும் இந்த ரோபோக்கள் ஆரோக்கியமான கலங்களுக்கு எந்தவிதமான சேதத்தினையும் ஏற்படுத்தாமல் புற்றுநோய் கட்டிகளை அழிக்கும் என பரம்பரை அலகு மருத்துவ நிபுணரான Hao Yan என்பவர் தெரிவித்துள்ளார்.

0 comments: