Saturday, June 1, 2013

பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக்ரோசொப்ட்



பேஸ்புக்கை தாக்கும் புதிய வகை ட்ரொஜன் ஹோர்ஸ் வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளதால் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. 'Trojan:JS/Febipos' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தன்னியக்கமாக Like, Comment மற்றும் Share செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. தற்போது பிரேஸில் மொழியில் பிரேசில் நாட்டில் அதிகளவில் வியாபித்துள்ள இந்த வைரஸ் ஐரோப்பா நாடுகளுக்கும் விரைவில் ஆங்கில மொழியிலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Firefox, Chrom போன்ற இணைய உலாவிகளின் Plug-ins என்ற போர்வையிலேயே இந்த வைரஸ் பரவுவதாகவும் குறித்த வைரஸ் தாக்கிய கணனியின் மூலம் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் அதிலிருந்து ஓரளவு தப்பிக்கவும் சில வழிகளைக் கூறியுள்ளது. 



அதாவது தரவேற்றம் செய்யக் கூறி புதிதாக Firefox, Chrom ஊடாக வரும் Plug-insகளை தவிர்த்தல் மேலும் பேஸ்புக்கினைப் பயன்படுத்திவிட்டு முறைப்படி அதிலிருந்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. இதேவேளை இந்த வைரஸ் விரைவில் பிரேஸில் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கும் பல மொழிகளில் பரவலடையும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகின்றது

0 comments: