Saturday, June 29, 2013

தோல்வியடைந்துள்ள IPHONE 5!



ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளின் ஆதிக்கம் இன்று அதிகரித்து வருகின்ற நிலையில் பல கையடக்கத் தெலைபேசி உற்பத்தி நிறுவனங்களும் பலத்த போட்டி போட்டுக் கொண்டு தமது தயாரிப்புகளை புதுப்புதுத் தொழிநுட்பங்களுடன் தயாரித்து அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். 

மாறி மாறி வெளியிடப்படும் கையடக்கத் தொலைபேசிகளின் வருகையானது ஸ்மார்ட் கையடக்கத் தொலை பேசிச் சந்தையினை பெரும் போட்டியுள்ளதாக மாற்றியுள்ளதுடன்ஒவ்வொரு நிறுவனங்களினதும் தயாரிப்புக்கென தனியான பாவனையாளர் ரசிகர் கூட்டம் உருவாகுவதற்கும் வழிவகுத்துள்ளது.

அந்த வகையில் Apple, Samsung, Nokia, Blackberry மற்றும் Sony ஆகிய நிறுவனங்கள் இன்று ஸ்மார்ட் கையடக்கத் தெலைபேசிச் சந்தையில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன் Apple iPhone ஆனது பெரும்பாலும் பலரால் விரும்பிப் பாவிக்கப்படுகின்ற ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில் பலருக்கும் அதிர்ச்சி தரும் விதமாகஅண்மையில் வெளியிடப்பட்டிருந்த ஆய்வொன்றினை அடிப்படையாகக் கொண்ட தரப்படுத்தல் மூலம் iPhone 5 ஆனது அதன் போட்டியாளரான ஏனைய சில தயாரிப்புகளை விடவும் குறைந்த வேகமும், செயற்றிறனும் கொண்டது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Geekbench 2 technical test என்று அழைக்கப்படுகின்ற தொழிநுட்பப் பரிசோதனையானது பிரித்தானியாவின் பிரபல்யம் வாய்ந்த ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளுக்கிடையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளின் பல்வேறு தொழிநுட்ப அம்சங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. இதனடிப்படையில் அதன் போட்டியாளர்களை விடவும் iPhone 5 ஆனது சில விடயங்களைக் கையாள்வதில் குறைந்த வேகத்துடனும்குறைந்த வினைத்திறனுடனும் செயற்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தரப்படுத்தலில் Samsung நிறுவனத்தின் Galaxy S4 முன்னிலை பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments: