Wednesday, March 14, 2018

Google AdSense சேவையில் தமிழ் மொழி

Google AdSense சேவையில் பன்மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழி சேர்க்கப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது.

2003-ம் ஆண்டு Google AdSense சேவை அறிமுகம் செய்யப்பட்டது, இந்த சேவையை கொண்டு கூகுள் இணையத்தளம், வலைத்தளம் உள்ளிட்டவற்றில் தகுதியான விளம்பரங்களை பதிவிட்டு, விளம்பரங்களை வழங்குவோரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை வசூலித்து, குறிப்பிட்ட ஒரு தொகையை வலைத்தள உரிமையாளருக்கு கூகுள் வழங்குகிறது.

முன்னதாக தமிழ் மொழி எழுத்தாளர்கள் மற்றும் வலைத்தள நிறுவனங்கள் கூகுள் அல்லாத மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்களை நாடும் நிலை இருந்து வந்தது.
Google AdSense சேவையில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டு இருப்பது இணையத்தில் புழங்கி வரும் தமிழ் மொழி எழுத்தாளர்கள் மற்றும் வலைத்தள நிறுவனங்களுக்கு வருவாய் ஈட்ட வழி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
புதிய அறிவிப்பின் படி தமிழ் மொழி தகவல்களை வழங்கி வரும் இணையத்தளங்கள் மற்றும் வலைப்பக்கங்களில் தமிழ் மொழி விளம்பரங்கள் இடம்பெறுவதை பார்க்க முடியும்.

ஏற்கனவே இந்தி, அரபிக், பல்கேரியன், சைனீஸ், க்ரோடியன், செக், தட்சு, தானிஷ், ஆங்கிலம், எஸ்தோனியன் மற்றும் பல்வேறு இதர மொழிகளுக்கு Google AdSense சேவை வழங்கப்பட்டு வருகின்றதுடன், சமீபத்தில் பெங்காளி மொழி சேர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Thursday, March 1, 2018

இனி iOS சாதனங்களில் Google சேவையை பயன்படுத்தலாம்...

Onlineல் Files சேமிக்கும் Cloud Storage வசதியினை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் வழங்கிவருகின்றன.

Apple நிறுவனமும் iCloud எனும் பெயரில் இச் சேவையை வழங்கி வருகின்றது.

தனது மொபைல் சாதனங்களில் பயனர்கள் Online Storage ஆக iCloud இனை மாத்திரம் பயன்படுத்தக்கூடியதாக இதுவரை வைத்திருந்தது.

ஆனாலும் புதிய iOS பதிப்பில் iCloud இற்கு பதிலாக Google Cloud Storageனை பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

இதனை Apple நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.