Friday, November 23, 2012

Microsoftன் Xbox வித்தை


வீடியோ விளையாட்டுகள் என்பது ஒன்றும் சின்ன பசங்க விஷயம் என்று ஒதுக்கி விடும் விஷயமில்லை. உலக அளவில் சென்ற 2008ஆம் ஆண்டு மொத்த வீடியோ விளையாட்டு பொருட்கள்,மென்பொருட்கள் விற்பனை மட்டும் 32 பில்லியன் டாலர்கள்.கணினியில் விளையாடப்படும் விளையாட்டுகளின்றி,வீடியோ விளையாட்டுகளுக்கேன்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கேமிங் கன்சோல்(Gaming Console)எனப்படும் விளையாட்டு இயக்கு பெட்டிகள் இப்போது உலகமெங்கும் சக்கை போடு போட்டுவருகின்றன.முதல் மூன்று இடத்தில் கடும் போட்டியுடன் இருப்பவை நின்டெண்டோவின்(Nintendo) விய்(Wii)மற்றும் DS,மைக்ரோசாப்ட்டின் Xbox மற்றும் சோனியின் ப்ளே ஸ்டேஷன் 3.


ஒருவருக்கொருவர் சளைக்காமல் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு இயக்கு பெட்டிகளையும் மென்பொருட்களையும் வெளியிட்டு வருகின்றனர்.இந்த வீடியோ பெட்டிகளை இயக்க ஒரு கட்டுப்பாட்டு பெட்டியும்(Gaming Controller)உண்டு.நின்டெண்டோவின் விய் ஒரு அருமையான விளையாட்டு சாதனம்.இதனுடன் இணைந்த சிறிய கட்டுப்பாட்டு பெட்டியை கையில் வைத்து கொண்டு எந்த திசையில் அசைத்தாலும் வீய் அதை உணர்ந்து கொள்ளும்.உதாரணத்திற்கு இந்த வீடியோ சாதனத்துடன் டென்னிஸ் விளையாடும் போது சிறிய கட்டுப்பாட்டு பெட்டியை உபயோகித்து பந்தை அடிப்பது போல் காற்றில் பாவனை செய்தாலே போதும்.இதே போல அதி துல்லிய வீடியோ விளையாட்டுகளை கையாள வல்லது சோனி ப்ளே ஸ்டேஷன்.



கடும் போட்டி கொடுத்த மைக்ரோசாப்ட் Xbox இப்போது தனது புதிய கண்டுபிடிப்பான Project Natal ஐ அடுத்த வருடம் வெளியிட இருக்கிறது.அசைவுகளை உணர்தலில் ஒரு படி மேலே சென்று,நமது கை,கால்கள் மற்றும்,உடலின் அசைவுகள்,மற்றும் குரலை கொண்டே Xbox சாதனத்துடன் விளையாட முடியும்.இதற்கென ஒரு விசேஷ சென்சார் கருவியை Xbox சாதனத்துடன் இணைத்தால் போதும்.இதுவே project Natal சென்சார் கருவி எனப்படுகிறது. திரைப்படங்களை,கையை காற்றில் அசைத்து,தேர்வு செய்து பார்க்கலாம்.மேலும் விவரங்களுக்கு இந்த வீடியோவை பாருங்கள்.


Monday, November 19, 2012

PDF TO WORD கன்வெர்டர் மென்பொருள் லைசன்ஸ் கீயுடன்......



alt

மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கிய வேர்ட் பைல்களை நாம் பிடிஎப் பைல்களாக கன்வெர்ட் செய்து வைத்திருப்போம். ஒருசில நேரங்களில் வேர்ட் பைலை அழித்துவிட்டு பிடிஎப் பைலை மட்டும் வைத்திருப்போம். 

அந்த நேரத்தில் குறிப்பிட்ட வேர்ட் பைலில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் நம்முடைய பாடு திண்டாட்டம் தான். இதுபோன்ற சமயங்களில் பிடிஎப் பைலை எப்படியாவது கன்வெர்ட் செய்து வேர்ட் பைலாக மாற்றி எடிட் செய்துவிட வேண்டும் என்று நினைத்து இணையத்தில் இதற்கான உதவியை நாடி செல்வோம். 


ஆன்லைன் மூலமாக கன்வெர்ட் செய்யலாம் என்றால் சரியான முறையில் கன்வெர்ட் ஆகாது. எதாவது ஒரு மென்பொருளை தரவிறக்கி அதன் மூலம் கன்வெர்ட் செய்துவிடலாம் என்றால் அதுவும் முடியாது.

 நாம் தேடிபோகும் மென்பொருளில் எதாவது ஒருசில குறைகள் இருக்கும். குறிப்பாக அந்த மென்பொருளானது பணம் செலுத்தி பெற வேண்டியதாக இருக்கும். 

அப்படியே இலவசமாக மென்பொருள் கிடைத்தாலும் அது சரியாக வேலை செய்யாது. இதுபோன்ற குறைகள் எதுவும் இல்லாமல் ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதுவும் இலவச லைசன்ஸ் கீயுடன்.
                                             மென்பொருளை தரவிறக்கசுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். லைசன்ஸ் கீயும் தரவிறக்க பகுதியிலேயே இருக்கும். 

YCUKF-HV9HY-DGY2X-WL735 இந்த கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக கணினியில் பதிந்து கொள்ளவும்.

 இந்த மென்பொருளை நீங்கள் இலவசமாக 2013 ஏப்ரல் 25 வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடதக்கது. 

பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

பின் எந்த பைலை கன்வெர்ட் செய்ய வேண்டும் அந்த பிடிஎப் பைலை தேர்வு செய்து நுழைக்கவும். பின் எந்த இடத்தில் கன்வெர்ட் செய்த பைலை சேமிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு கொள்ளவும். 


பின் Convert என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்த சில மணி நேரங்களில் உங்களுடைய பைலானது வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.

இதுபோல பைலை கன்வெர்ட் செய்யும் போது வேண்டுமானால் குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 


இந்த மென்பொருளில் ட்ராக் அன்ட் ட்ராப் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. 

இவ்வாறு நாம் கன்வெர்ட் செய்யும் போது மைரோசாப் வேர்ட் தொகுப்போ பிடிஎப் ரீடரோ எதுவும் தேவையில்லை. 

கடவுச்சொல் புகுத்தப்பட்ட பைல்களையும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 

பிடிஎப் பைலில் இருக்கும் படம், எழுத்து ஆகியவை சரியான முறையில் கன்வெர்ட் செய்யப்படும். ஒரே நேரத்தில் பல்வேறு பிடிஎப் பைல்களை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 

இந்த மென்பொருளானது விண்டோஸ் 98, ME, NT, 2000, XP, 2003, Vista மற்றும் விண்டோஸ் 7 ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். 

இந்த மென்பொருளுடைய சந்தைவிலை $29.95 ஆகும்.

Friday, November 16, 2012

ஆங்கிலம் கற்பவர்களுக்கு பயனுள்ள வலைத்தளம்


நமது தாய்மொழியாம் தமிழ் உடன் தற்போது ஆங்கிலம் அறிந்திருப்பது தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.ஆங்கிலம் தற்போது கற்று கொண்டு இருப்பவர்களுக்கு Word Hippo என்ற இந்த வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



இந்த தளத்தில் உள்ள வசதிகள் சில

1.ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையான பிற வார்த்தைகளை அறிய உதவுகிறது .

2.ஒரு ஆங்கில வார்த்தைக்கு எதிர்பத வார்த்தையை அறிய உதவுகிறது .

3.ஒரு ஆங்கில வார்த்தையை கொடுத்தால் அந்த ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி இருக்கும் ஆங்கில வரியை தருகிறது.

4.முக்கியமாக ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையான ஒருமை(singular), பன்மை(plural),நிகழ்காலம்(present tense) மற்றும் எதிர்கால(past tense) ஆங்கில வார்த்தைகளை தருகிறது.

5.மேலும் ஒரு மொழியில் இருந்து வேறு மொழிக்கு மாற்றம் செய்யவும் செய்கிறது.



வலைத்தள சுட்டி

Thursday, November 15, 2012

எப்படி ஒரு CD (compact disk ) உருவாக்குவது...

எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் நம்முடைய தகவல்களை பரிமாறி கொள்ள பயன்படும் CD.  நம்முடைய என்னட்ர File கலை மிக எளிதாக பரிமாறி கொள்ளவும்  சேமித்து  வைக்காவும் பெரும் பங்கு வகிப்பவை.என்ன தான் Pendrive, Hardisk, என தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இன்று வரை CD (compact disk ) யின் பயன்பாடு குறையவே இல்லை,இயந்திர கைகளின் அபார உழைப்பால் எப்படி  இந்த CD 's  தயாராகிறது பாருங்கள்.

Tuesday, November 13, 2012

உங்கள் ஆன்ட்ராய்ட் போன் தொலைந்து போனால் கண்டுபிடிக்க


பெரும்பாலும் நாம் வாங்கும் ஆன்ட்ராய்ட் போன்கள் ரூபாய் 8000 என்ற அளவில் இருந்து தெரிவு செய்வோம். அதற்கும் குறைவாக கூட கிடைக்கிறது. ஆனால் நல்ல Specification என்று பார்க்கும் போது நாம் விலை உயர்ந்த ஒன்றை தான் தெரிவு செய்து வாங்குகிறோம். அவ்வளவு போட்டு வாங்கிய பின் அதை தொலைத்து விட்டால்? உங்கள் போன் போவது மட்டுமின்றி, உங்கள் அனைத்து ரகசியங்களும் திருடியவன் கைக்கு சென்று விடும். 

அப்படி தொலைந்து போனால் அதை எப்படி திரும்ப கண்டுபிடிப்பது, அதை இணையத்தில் இருந்து கண்ட்ரோல் செய்வது என்பதற்கு உதவுகிறது Android Lost. 

முதலில் இதை நீங்கள் உங்கள் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்னர் http://www.androidlost.com/ என்ற அவர்கள் தளத்தில் உங்கள் கூகுள் கணக்கின் மூலம் நுழைந்து தகவல்களை தர வேண்டும். 

அதில் பல தகவல்கள் கேட்கப்பட்டு இருக்கும். பொறுமையாய் படித்து ஒவ்வோட்ரையும் புரிந்து கொண்டு அதை நிரப்பவும். 

  • Basic
  • Status
  • Messages
  • Security
  • MobilePremium
இந்த ஐந்து பகுதிகளும் தான் நீங்கள் நிரப்ப வேண்டியது. 

அடுத்து உங்கள் போனில் 

Settings >> Location & Security >>Select Device Administrator என்பதில் இதை Device Administrator ஆக தெரிவு செய்து விடவும். 

முடிந்தது வேலை. இனி உங்கள் போன் தொலைந்து போனால் இதில் சில மாற்றங்களை நீங்கள் செய்ய இயலும். 

நான் அவற்றை இது வரை செய்து பார்த்தது இல்லை. ஆனால் ஒவ்வொரு முறை சிம் கார்டு மாற்றும் போதும் நான் தந்துள்ள நண்பரின் அலைபேசிக்கு என்னுடைய புதிய Sim Card நம்பர் மெசேஜ் ஆக சென்று விடும். (balance இருந்தால் மட்டும்) . இது ஒன்றே உங்கள் அலைபேசியை கண்டுபிடிக்க போதும். இதை Activate செய்ய http://www.androidlost.com/ - இல் SMS என்ற மெயின் menu வில் SMS Allow என்ற பகுதியில் நீங்கள் செய்யலாம்.


அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும். 

Sunday, November 11, 2012

மொபைல் போனில் இருந்து கம்ப்யூட்டர்க்கு இன்டர்நெட் கனக்க்ஷென்




 வளரும் இணையத்தில் இது ஏற்கனவே நமக்கு அறிமுகமான ஒன்று. இதற்கு தேவை ஒரு  GPRS உள்ள மொபைல், மற்றும் அவர்கள் நமக்கு வழங்கி உள்ள PC SUITE   (NOKIA, SONY ERICKSON, SAMSUNG). இவை மூலமாக மொபைல் ஐ பயன்படுத்தி நம் கம்ப்யூட்டர் இல் இணையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இப்போது  உங்கள் நோக்கியா, சோனி, சாம்சங் போன்றவை உங்களுக்கு PC SUITE வசதியினை  அளித்து உள்ளனர் . முதலில் நாம் GPRS connect செய்ய  நமக்கு அதற்கு உரிய செட்டிங்க்ஸ் வேண்டும்.  எனவே உங்கள் customer care ஐ தொடர்பு  கொண்டு இந்த வசதியினை நீங்கள் பெற்று கொள்ளலாம்.

இந்த வசதிகள் உங்களுக்கு கிடைத்தபின் நீங்கள் நோக்கியா போன் வைத்து இருந்தால்

S40:  1 .Menu-->Settings--> configuration Settings--> default configuration settings (choose "mobile office" for airtel users, choose "Aircel " or "Aircel(--> web)" for aircel users ).
then,  configuration Settings--> preferred access point(select that what you choose in the above)
 and 

2 .Menu--> Web--> Settings--> Configuration settings இதிலும் நீங்கள் மேலே உள்ளது படி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். அல்லது அதன் படி மாற்றி கொள்ளவும். 

S60: same in the above, with small changes as per your mobile menu settings.

இப்போது உங்கள் மொபைல் இல்  நீங்கள் இன்டர்நெட் connection   ஐ ஓபன் செய்து "homepage" செல்லவும் அது கூகுள் homepage க்கு சென்றால் நீங்கள் செய்தது சரிதான்.

இப்போது உங்கள் போனை கம்ப்யூட்டர் உடன் data cable மூலம் இணைக்கவும்.


நீங்கள் இப்போது இதனை உங்கள் PC suite இல் ஓபன் செய்யவும். இப்போது கீழ்வரும் விண்டோ  ஓபன் ஆகும்.


இப்போது இன்டர்நெட் connection ஆகும். ஆனால் maximum failed என்றே வரும்.  வட்டமிட்டதை கிளிக் செய்து அடுத்த கட்டத்திற்கு செல்லவும்.
இதில் உங்கள்   மொபைல் மாடல் தெரியும்.


இப்போது அடுத்த கட்டத்திற்கு செல்லவும்.



இதில் உங்கள் நெட்வொர்க் ஐ நீங்கள் choose செய்யவும்.

AIRCEL CHENNAI, AIRCEL (TN), AIRTEL INDIA,.....இது போன்று நீங்கள் செலக்ட் செய்து ஓகே செய்யவும்.அடுத்து வரும் விண்டோவில் connect கொடுத்தால் இன்டர்நெட் connect ஆகி விடும்

 கீழே உள்ளது AIRCEL பயனர்களுக்கு மட்டும்:

ஆனால் AIRCEL CHENNAI, AIRCEL (TN) ஆகியவற்றுக்கு நீங்கள் manual செட்டிங் மூலமாக மட்டுமே connect செய்ய முடியும்.  இந்த விண்டோவிலேயே manual பொத்தான் உள்ளது.   இதனை அப்போது கிளிக் செய்யவும்.




அதனை கிளிக் செய்து விட்டு ஓகே கொடுத்து, அடுத்த விண்டோவில் 


Access Point என்பதில் "aircelgprs.pr" என்பதை கொடுத்து கொடுத்து ஓகே செய்யவும்.

அடுத்து வரும் விண்டோவில் connect கொடுத்தால் இன்டர்நெட் connect ஆகி விடும்.

அப்படி ஆகாவிட்டால் உங்கள் customer care ஐ தொடர்பு கொள்ளவும். மற்ற நெட்வொர்க், மொபைல் பயன்படுத்துவோர் இதே போல முயற்சிக்கவும்.

இப்போது நீங்கள் இன்டர்நெட் க்கு என தனியாக recharge செய்து கொள்ளவும்.
ஏதேனும் புரியவில்லை எனில் கேட்கவும். தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும். 

டிஸ்கி: நீங்க இத வச்சு browse மட்டும்தான் பண்ண முடியும்.(ஸ்பீட் 460.8 kb) . நீங்க இத வச்சு  எந்திரன் படம் டவுன்லோட் பண்ண ஒரு மூணு மாசம் ஆகும். 
இத வச்சு நீங்க ஜிமெயில் slow connectionல ஓபன் பண்ணலாம், மத்தபடி எல்லாமே ஓபன் செய்யலாம்.ஆனால் 3ஜி  வரப்போவதால் இதன் ஸ்பீட் மேலும் அதிகரிக்கும்.

Wednesday, November 7, 2012

குறிப்பிட்ட நேரத்தில் கணினியை தானாக Shutdown செய்ய…




                                                                     இரவு நேரம் ஒரு பெரிய file தரவிறக்கம் செய்துகொண்டிருப்பீர்கள்.  தரவிற க்கம் முடிவதற்கு இன்னும் 1 மணி நேரம் இருக் கும்.  ஒரு மணி நேரம் கழித்து கணினியை யாரவ து shutdown செய்து வைப்பார்களானால் தூங்கியிருக்கலாமே என்று நினைப்போம் நாம்.  தரவிற க்கம் முடியும் வரை விழித்துக் கொண்டிருப்போ ம்.


இந்த குறையை போக்க வந்தது தான் இந்த அரு மையான PShut Down மென்பொருள்.
இந்த மென்பொருள் வெறும் 1 MB அளவு கொண் டது. இதை தரவி றக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து கொண்டால், நாம் குறிப்பிடும் நேரத்திற்கோ, குறிப்பிடும் நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது பின்போ பின்வருவனவற்றை செய்கிறது.
    1.கணினி shotdown
    2.கணினியை ரீஸ்டார்ட் செய்யும்.
    3.கணினி திரையை அணைக்கும்.
    4.செய்தியை காண்பிக்கும்.
    5.மென்பொருளை ஓட விடும்.
    6.லாக் ஆஃப் ஆகும்.
    7.அலாரம் அடிக்கும்
இது போன்றவற்றை நாம் குறிப்பிடும் நேரத்தில் தானாக செய் கிறது. இந்த அற்புதமான மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

Thursday, November 1, 2012

உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES



ரொம்ப நாளாகவே இந்த விஷயத்தை உங்களோடு பகிர வேண்டும் என நினைத்திருந்தேன். 
easy software serial code finder websites,crack
இன்றைக்குத்தான் அதற்கான நேரம் கிடைச்சிருக்கு..

இலவச மென்பொருள்...! 

முற்றிலும் இலவச மென்பொருள்... !Free software..!

இப்படித்தான் நம்மோட KINGDOM OF கீழக்கரை தளத்துல அதிகமான வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பேன்..



ஏனென்றால் எல்லோரும் விரும்புவது இலவசத்தைதான்... பணம் போட்டு வாங்கிப் பயன்படுத்துகிற அளவுக்கு தொழில்முறை பயனாளர்கள் (Professional users) யாரும் நம்மில் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம்..

பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள்கள் மிகச்சிறந்த வேலைகளை செய்கின்றன. அதிக பட்ச வசதிகள் அதில் உண்டு.

பணம் கொடுத்து வாங்காமல் இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களையே (Trial version software) கட்டண மென்பொருள்களாக மாற்றிப் பயன்படுத்த முடியும். 

கட்டண மென்பொருளாக மாற்றுவதற்கும் ஒரு சில வழிமுறைகள் இருக்கிறது. அம்மென்பொருள்களுக்கான  Serial Number (Key) கிடைத்தால் அந்த மென்பொருள்களை முழுவதுமாக நாம் பயன்படுத்த முடியும்.

இதுவரைக்கும் நாம் Serial Number இல்லாமல் வெறும் Trail Software -ஐ மட்டும் நாம் டவுன்லோட் செய்து பயன்படுத்தி வந்திருப்போம்.  ட்ரையல்வெர்சன் மென்பொருளை நிறுவினால் அது  அதிக  பட்சமாக 30 நாட்கள் மட்டுமே செயல்படும்.

அவ்வாறில்லாமல் அந்த Trail Version யே கட்டண மென்பொருளாக மாற்றிக்கொள்ள சில தளங்கள் மென்பொருளுக்கான Serial Number-கள் இலவசமாக வழங்குகிறது.அந்த சீரியல் எண்களைப் பயன்படுத்தி உங்களுடைய Trial Version மென்பொருளை  கட்டண மென்பொருளாக மாற்றிப் பயன்படுத்த முடியும். 

மென்பொருள்களுக்கான Serial Number களைக் கொடுக்கும் ஒரு சில தளங்கள் உள்ளன. அதாவது சோதனைப் பதிப்பு மென்பொருள்களுக்கான சிரியல் எண்களை இலவசமாக கொடுத்து, அதை கட்டண மென்பொருள்களாக மாற்றிக்கொள்ள முடியும். 

இதற்கு உதவும் ஒரு சில தளங்கள்: 

1. http://www.findserialnumber.com
2. http://www.serials.be
3. http://www.youserials.com
4. http://www.serials4u.com
5. http://serialnumber.in
6. http://www.cserial.com
7. http://www.egydown.com

நாம் கணினியில் பயன்படுத்தும் முக்கிய மென்பொருள்களுக்குரிய all Software serial numbers சீரியல் எண்களும் இத்தளங்களில் கிடைக்கும் எனபதே இத்தளங்களுக்குரிய சிறப்பு.

நீங்களும் உங்கள் Trial Version மென்பொருள்களுக்கான Serial Numbers இத்தளத்தின் வாயிலாக பெற்று, மென்பொருளை நிறுவி பயன்படுத்தி மகிழுங்கள்.