Friday, November 23, 2012

Microsoftன் Xbox வித்தை


வீடியோ விளையாட்டுகள் என்பது ஒன்றும் சின்ன பசங்க விஷயம் என்று ஒதுக்கி விடும் விஷயமில்லை. உலக அளவில் சென்ற 2008ஆம் ஆண்டு மொத்த வீடியோ விளையாட்டு பொருட்கள்,மென்பொருட்கள் விற்பனை மட்டும் 32 பில்லியன் டாலர்கள்.கணினியில் விளையாடப்படும் விளையாட்டுகளின்றி,வீடியோ விளையாட்டுகளுக்கேன்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கேமிங் கன்சோல்(Gaming Console)எனப்படும் விளையாட்டு இயக்கு பெட்டிகள் இப்போது உலகமெங்கும் சக்கை போடு போட்டுவருகின்றன.முதல் மூன்று இடத்தில் கடும் போட்டியுடன் இருப்பவை நின்டெண்டோவின்(Nintendo) விய்(Wii)மற்றும் DS,மைக்ரோசாப்ட்டின் Xbox மற்றும் சோனியின் ப்ளே ஸ்டேஷன் 3.


ஒருவருக்கொருவர் சளைக்காமல் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு இயக்கு பெட்டிகளையும் மென்பொருட்களையும் வெளியிட்டு வருகின்றனர்.இந்த வீடியோ பெட்டிகளை இயக்க ஒரு கட்டுப்பாட்டு பெட்டியும்(Gaming Controller)உண்டு.நின்டெண்டோவின் விய் ஒரு அருமையான விளையாட்டு சாதனம்.இதனுடன் இணைந்த சிறிய கட்டுப்பாட்டு பெட்டியை கையில் வைத்து கொண்டு எந்த திசையில் அசைத்தாலும் வீய் அதை உணர்ந்து கொள்ளும்.உதாரணத்திற்கு இந்த வீடியோ சாதனத்துடன் டென்னிஸ் விளையாடும் போது சிறிய கட்டுப்பாட்டு பெட்டியை உபயோகித்து பந்தை அடிப்பது போல் காற்றில் பாவனை செய்தாலே போதும்.இதே போல அதி துல்லிய வீடியோ விளையாட்டுகளை கையாள வல்லது சோனி ப்ளே ஸ்டேஷன்.



கடும் போட்டி கொடுத்த மைக்ரோசாப்ட் Xbox இப்போது தனது புதிய கண்டுபிடிப்பான Project Natal ஐ அடுத்த வருடம் வெளியிட இருக்கிறது.அசைவுகளை உணர்தலில் ஒரு படி மேலே சென்று,நமது கை,கால்கள் மற்றும்,உடலின் அசைவுகள்,மற்றும் குரலை கொண்டே Xbox சாதனத்துடன் விளையாட முடியும்.இதற்கென ஒரு விசேஷ சென்சார் கருவியை Xbox சாதனத்துடன் இணைத்தால் போதும்.இதுவே project Natal சென்சார் கருவி எனப்படுகிறது. திரைப்படங்களை,கையை காற்றில் அசைத்து,தேர்வு செய்து பார்க்கலாம்.மேலும் விவரங்களுக்கு இந்த வீடியோவை பாருங்கள்.


0 comments: