Friday, August 8, 2014

வெறும் 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும்!





வளர்ந்து வரும் இந்த உலகில் மொபைல் முதலிடத்தை பிடித்துள்ளதைப் போன்று, ஆராய்ச்சியாளர்களும் அதன் தொழில்நுட்பங்களில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
ஆம், உலகின் வேகமான மொபைல் போன் சார்ஜரை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சார்ஜர் வெறும் 15 நிமிடங்களில் மொபைல் போனை முழுவதுமாக சார்ஜ் செய்து விடும். மொபைல் போனை வேகமாக சார்ஜ் செய்யும் நோக்கத்துடன் பேட்டலைட் ஃப்ளக்ஸ் பேட்டரி அமைப்புகள் நிறுவப்பட்டது.
ஃப்ளக்ஸ் பேட்டரி விரைவில் இண்டிகோகோ கூட்டத்தில், நிதி வலைத்தளத்தில் தொடங்கப்படும் (IndieGoGo crowd-funding website). சமீபத்தில் யு.என்.யு அமைப்பு ஒரு புதிய பேட்டரி பேக் 15 நிமிடங்களில் ஸ்மார்ட்போனை முற்றிலும் ரீசார்ஜ் செய்து விடும் என கூறியது.
2000mAh திறன் கொண்ட பேட்டரி சுமார் 15 நிமிடங்கள் ரீசார்ஜ் செய்து விடும். மேலும் இதில் 3000mAh, 10000mAh திறன் கொண்ட பேட்டரிகளும் கிடைக்கும்.
3000mAh திறன் கொண்ட பேட்டரியின் விலை ரூ .3,600. 10000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி ரூ. 6,000 க்கு விற்கப்படும் என தெரிகிறது.

0 comments: