அனைத்து இடங்களிலும் ஏடிஎம் கார்டை பயன்படுத்துவது சாதாரணமாகிவிட்டது.
கடைகளுக்கு சென்றாலும் அங்கு பணம் செலுத்துவதற்கு ஏடிஎம் கார்டைதான் உபயோகிக்கின்றோம்.
பணபரிவர்த்தனைகளுக்கு இது எளிதாக இருந்தாலும் ஆபத்து நிறைந்தது. அனைத்து இடங்களிலும் நாம் கார்டினை பயன்படுத்துவது பாதுகாப்பாக இருப்பதில்லை. எளிதாக நமது வங்கி கணக்கின் விவரங்களை திருடிவிடும் அபாயமுள்ளது.
மால்வேர்(Malware)
மால்வேர் என்னும் மென்பொருளினை பயன்படுத்தி நமது லேப்டாப், கணினி, செல்போன்களில் உள்ள நமது கார்டு பற்றிய தகவல்களை திருடிவிடலாம்.
இதுமட்டுமல்லாது ஏடிஎம்-களில் இந்த மென்பொருளை பதிவேற்றில்விட்டால் அங்கு பயன்படுத்தப்படும் அனைத்து கார்டுகளின் விவரங்களையும் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
குளோனிங்(Cloning)
நமது கார்டினை போன்று புதிதாக ஒரு கார்டினை உருவாக்குவது குளோனிங் எனப்படுகிறது. பி.ஓ.எஸ். என்னும் இயந்திரங்களில் கார்டினை உபயோகிக்கும் போது நமது தகவல்கள் திருடப்பட்டு போலி கார்டுகள் உருவாக்கப்படுகின்றன.
ஸ்கிம்மிங்(Skimming)
ஏடிஎம் இயந்திரங்களில் இரகசிய கேமராவினை பொருத்தி அதன் மூலம் கார்டினை உபயோகிக்கும் போது அதன் ’பின்’ நம்பரை எளிதாக அறிந்து எளிதாக நமது வங்கி கணக்கில் இருந்து பணத்தினை திருடிவிடக்கூடும்.
பிஷிங்(Phishing)
ரிசர்வ் வங்கியில் இருந்து வருவதை போல் உங்கள் மெயிலுக்கு வங்கி கணக்கு எண், கார்டு குறித்த தகவல்கள் கேட்கப்படும். இதற்கு நாம் பதில் அளித்துவிட்டால் உடனடியாக நம் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுவிடும்.
விஷிங், ஸ்மிஷிங்(Wishing and Smishing)
வங்கியிலிருந்து பேசுவதை போன்று யாராவது போன் செய்து உங்கள் வங்கி கணக்கு விவரங்களை கேட்பர். நாம் கூறிவிட்டால் உடனடியாக நம் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுவிடும்.
நமது மொபைல் எண்ணுக்கு ஏதெனும் இணைய தள லிங்க்குடன் மேசேஜ் வரும். நாம் தெரியாமல் அந்த பக்கத்திற்கு சென்றுவிட்டால் உடனே தகவல்களை திருடும் மென்பொருள் மூலம் சில விநாடிகளில் நமது தகவல்கள் திருடப்பட்டுவிடும். இது ஸ்மிஷிங் என்று அழைக்கப்படுகிறது.
இதிலிருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை
ஏடிம் கார்டு, கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதற்கு முன் கவனம் தேவை. கார்டினை பயன்படுத்தி பணம் எடுப்பதற்கும் பரிமாற்றம் செய்வதற்கு வரைமுறை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.
இதன் மூலம் உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டாலும் குறைந்த பாதிப்பே ஏற்படும். இதற்கான வசதியினை பெரும்பாலான வங்கிகள் வழங்குகின்றன.
அடிக்கடி ஏடிஎம் பின் நம்பரை மாற்றி கொள்ளுங்கள். ஓ.டி.பி.(OTP) மற்றும் பின் நம்பரை யாரிடமும் தெரிவிக்காதீர்கள்.