Showing posts with label IOS. Show all posts
Showing posts with label IOS. Show all posts
Sunday, March 23, 2014
Sunday, March 16, 2014
அப்பிள் iOS 8 இயங்குதளத்தில் அதிரடி மாற்றம்
Thursday, March 13, 2014
மிகப்பெரிய கோப்புக்களை பகிர உதவும் iOS அப்பிளிக்கேஷன்.......
| மின்னஞ்சல் மூலமாக பல்வேறு Files பகிர்ந்து கொள்ளும் வசதி காணப்படுகின்ற போதிலும் குறிப்பிட்ட கொள்ளளவு உடைய File களையே பகிர முடியும்.
அவ்வாறே அப்பிளின் iOS இயங்குதளத்தினைக் கொண்ட மொபைல் சாதனத்திலிருந்து 10GB வரையிலான File களை பகிர்ந்துகொள்வதற்கு WeTransfer எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
SMS இணைத்தும் பெரிய Fileகளை பகிரும் இந்த வசதியில் Plus எனும் மற்றுமொரு கணக்கு காணப்படுகின்றது.
இதில் 50GB வரையான கோப்புக்களை பகிர முடிவதுடன் மாதம் ஒன்றிற்கு 10 டொலர்களும், வருடத்திற்கு 120 டொலர்களும் செலுத்தி இந்த வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
|
Wednesday, September 11, 2013
எச்சரிக்கை !! PRIYANKA இடம் ஏமாந்து விடாதீர்கள் – தயவுசெய்து படியுங்கள்
எச்சரிக்கை :-
Smart Phone களுக்கான WhatsApp Application மூலம் Priyanka எனும் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது. நீங்களும் WhatsApp பாவனையாளர் எனின் சற்று அவதானமாக இருக்கவும். இது Whatsapp மூலமாக உங்கள் மொபைலுக்கு ஒரு Contact வடிவில் வரும்.
இதனை நீங்கள் Contact ஆக சேமித்துவிட வேண்டாம். மீறி சேமித்து விட்டால் இது உங்கள் மொபைலில் தனது கை வரிசையை காட்ட ஆரம்பித்து விடும்.
அப்படி என்னதான் செய்கிறது இத்தீய செய்நிரல்?
இதனை நீங்கள் சேமித்துவிட்டால் உங்கள் Contact இல் சேமித்திருக்கும் அனைத்து இலக்கங்களையும் Priyanka என மாற்றிவிடுகின்றது.
தீர்வு தான் என்ன?
Priyanka என்றோ அல்லது வேறு சந்தேகத்துக் கிடமாகவோ வரும் Contact அல்லது கோப்புக்களை சேமிக்காதீர்கள். தெரிந்தோ தெரியாமலோ அவ்வாறு சேமித்திருந்தால் Settings இல் இருக்கும் Application Manager ஊடாக சென்று WhatsApp Application ஐ தெரிவு செய்து Force stop என்பதனை சுட்டிய பின் Clear Data என்பதனை சுட்டுங்கள் அவ்வளவு தான்.
எது எப்படியோ உங்களது அனுமதியின்றி இதனால் தன்னைத்தானே சேமித்துகொள்ள முடியாது எனவே சற்று அவதானத்துடன் இருப்பதன் மூலம் உங்களை நீங்கள் பாதுகாத்திடலாம்.
Saturday, June 29, 2013
தோல்வியடைந்துள்ள IPHONE 5!
மாறி மாறி வெளியிடப்படும் கையடக்கத் தொலைபேசிகளின் வருகையானது ஸ்மார்ட் கையடக்கத் தொலை பேசிச் சந்தையினை பெரும் போட்டியுள்ளதாக மாற்றியுள்ளதுடன், ஒவ்வொரு நிறுவனங்களினதும் தயாரிப்புக்கென தனியான பாவனையாளர் ரசிகர் கூட்டம் உருவாகுவதற்கும் வழிவகுத்துள்ளது.
அந்த வகையில் Apple, Samsung, Nokia, Blackberry மற்றும் Sony ஆகிய நிறுவனங்கள் இன்று ஸ்மார்ட் கையடக்கத் தெலைபேசிச் சந்தையில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன் Apple iPhone ஆனது பெரும்பாலும் பலரால் விரும்பிப் பாவிக்கப்படுகின்ற ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியாகக் காணப்படுகின்றது.
இந்நிலையில் பலருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக, அண்மையில் வெளியிடப்பட்டிருந்த ஆய்வொன்றினை அடிப்படையாகக் கொண்ட தரப்படுத்தல் மூலம் iPhone 5 ஆனது அதன் போட்டியாளரான ஏனைய சில தயாரிப்புகளை விடவும் குறைந்த வேகமும், செயற்றிறனும் கொண்டது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Geekbench 2 technical test என்று அழைக்கப்படுகின்ற தொழிநுட்பப் பரிசோதனையானது பிரித்தானியாவின் பிரபல்யம் வாய்ந்த ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளுக்கிடையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளின் பல்வேறு தொழிநுட்ப அம்சங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. இதனடிப்படையில் அதன் போட்டியாளர்களை விடவும் iPhone 5 ஆனது சில விடயங்களைக் கையாள்வதில் குறைந்த வேகத்துடனும், குறைந்த வினைத்திறனுடனும் செயற்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தரப்படுத்தலில் Samsung நிறுவனத்தின் Galaxy S4 முன்னிலை பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Monday, June 24, 2013
இலவசமாக Call மற்றும் Message செய்ய உதவும் Line Application
ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் இலவச Message அல்லது Call செய்யும் Application களை பயன்படுத்துவார்கள். பெரும்பாலான Application கள் இவற்றில் ஏதேனும் ஒரு வசதியை மட்டுமே பயனர்களுக்கு வழங்கும். அப்படி இல்லாமல் இரண்டையும் தரும் ஒரு பயனுள்ள Application பற்றி இன்று பார்ப்போம்.
Line என்ற இந்த Application மூலம் உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுடன் நீங்கள் பேசலாம் அல்லது இலவசமாக மெசேஜ் செய்யலாம். எந்தவிதமான ஒரு லிமிட்டேஷனும் இல்லாமல் 24 மணி நேரமும் இதை செய்யும் வசதியை Line Application உங்களுக்கு வழங்குகிறது. உலகம் முழுவதும் 15 கோடி பயனர்கள் இந்த Application ஐ பயன்படுத்தி வருகிறார்கள்.
நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் Offline – இல் உள்ளார் என்றால் நீங்கள் விஷயத்தை பேசி ரெகார்ட் செய்து அனுப்பலாம். வீடியோ/ஆடியோ என இரண்டு வகையிலும் செய்ய முடியும்.
இது எல்லா Smartphone க்கும் உள்ளது. அத்தோடு Windows மற்றும் Mac கணினிகளிலும் இதை நீங்கள் பயன்படுத்த முடியும். உங்கள் போனில் இதை இன்ஸ்டால் செய்யும் போது உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் Register செய்து கொண்டால் உங்கள் கணினியில் இருந்தே நண்பர்களுக்கு call செய்யலாம்.
இவற்றோடு புதிய Status, Photos போன்றவற்றை Timeline என்ற பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பகுதி Social Network போல இயங்கும்.
இதற்கெல்லாம் ஒரே தேவை உங்கள் நீங்களும் உங்கள் நண்பரும் Line – ஐ பயன்படுத்த வேண்டும். அத்தோடு இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
சிறப்பம்சங்கள்:
- இலவசமாக Call செய்யும் வசதி.
- மிக வேகமான செயல்பாடு. ஒரு சில நொடிகளில் Call/Message சென்றடைகிறது.
- Chat மூலம் படங்கள், ஆடியோ, வீடியோ அனுப்பும் வசதி
- Group Chat வசதி
- கணினிகளிலும் இயங்கும் வசதி
- முழுக்க முழுக்க இலவசம்.
Android பயனர்கள்:
முதலில் Line Application பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் Install என்பதை கிளிக் செய்யுங்கள். ஏற்கனவே Google Play தளத்தில் உங்கள் ஜிமெயில் ஐடி மூலம் Sign in ஆகி இருந்தால் அடுத்தும் Install என்று கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் போனில் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை இங்கே கொடுத்து Sign in செய்து பின்னர் இன்ஸ்டால் என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்கள் போனில் GPRS/Wifi – ஐ Enable செய்தால் App தானாக Download ஆகிவிடும். உங்கள் மொபைலில் இன்ஸ்டால் ஆன பிறகு உங்கள் நம்பர் கொடுத்து உங்கள் Line கணக்கை தொடங்கி விடலாம். நீங்கள் விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் Register செய்து கொள்ளலாம்.
Windows Phone, iPhone, Blackberry மற்றும் Nokia Asha பயனர்கள்:
உங்கள் போனில் App Market சென்று Line என்று தேடி டவுன்லோட் செய்யுங்கள் பின்னர் உங்கள் மொபைல் நம்பர் கொடுத்து Register செய்யுங்கள்.
தரவிறக்க:
- மொபைல்
- Android [**Android பயனர்கள்இந்த இணைப்பில் கிளிக் செய்து வரும் பக்கத்தில் Install என்பதை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் போனில் GPRS/Wifi - ஐ Enable செய்து தானாக Download செய்யலாம்**]
- iPhone
- Windows Phone 8
- Blackberry
- Nokia Asha
டவுன்லோட் செய்து பயன்படுத்துபவர்கள் More >> Add Friends மூலம் புதிய நண்பர்களை சேர்க்கலாம். என்னை சேர்க்க Search By ID என்பதில் prabukrishna என்று தேடுங்கள்.
Android – க்கு QR Code:
Android பயனர்கள் கீழே உள்ள QR Code ஐ உங்கள் போனில் ஸ்கேன் செய்தும் டவுன்லோட் செய்யலாம்.

Subscribe to:
Posts (Atom)