Showing posts with label Mobile Phone. Show all posts
Showing posts with label Mobile Phone. Show all posts

Wednesday, March 12, 2014

Windows Phone 8.1 இயங்குதளத்தின் புதிய அம்சங்களை விளக்கும் வீடியோ வெளியீடு


மைக்ரோசொப்ட் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Windows Phone 8.1 இயங்குதளத்தினை விரைவில் வெளியிடவுள்ளது.
பல புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயங்குதளத்தில் WiFi Sense தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இத்தொழில்நுட்பத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.








Saturday, June 29, 2013

தோல்வியடைந்துள்ள IPHONE 5!



ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளின் ஆதிக்கம் இன்று அதிகரித்து வருகின்ற நிலையில் பல கையடக்கத் தெலைபேசி உற்பத்தி நிறுவனங்களும் பலத்த போட்டி போட்டுக் கொண்டு தமது தயாரிப்புகளை புதுப்புதுத் தொழிநுட்பங்களுடன் தயாரித்து அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். 

மாறி மாறி வெளியிடப்படும் கையடக்கத் தொலைபேசிகளின் வருகையானது ஸ்மார்ட் கையடக்கத் தொலை பேசிச் சந்தையினை பெரும் போட்டியுள்ளதாக மாற்றியுள்ளதுடன்ஒவ்வொரு நிறுவனங்களினதும் தயாரிப்புக்கென தனியான பாவனையாளர் ரசிகர் கூட்டம் உருவாகுவதற்கும் வழிவகுத்துள்ளது.

அந்த வகையில் Apple, Samsung, Nokia, Blackberry மற்றும் Sony ஆகிய நிறுவனங்கள் இன்று ஸ்மார்ட் கையடக்கத் தெலைபேசிச் சந்தையில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன் Apple iPhone ஆனது பெரும்பாலும் பலரால் விரும்பிப் பாவிக்கப்படுகின்ற ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில் பலருக்கும் அதிர்ச்சி தரும் விதமாகஅண்மையில் வெளியிடப்பட்டிருந்த ஆய்வொன்றினை அடிப்படையாகக் கொண்ட தரப்படுத்தல் மூலம் iPhone 5 ஆனது அதன் போட்டியாளரான ஏனைய சில தயாரிப்புகளை விடவும் குறைந்த வேகமும், செயற்றிறனும் கொண்டது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Geekbench 2 technical test என்று அழைக்கப்படுகின்ற தொழிநுட்பப் பரிசோதனையானது பிரித்தானியாவின் பிரபல்யம் வாய்ந்த ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளுக்கிடையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளின் பல்வேறு தொழிநுட்ப அம்சங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. இதனடிப்படையில் அதன் போட்டியாளர்களை விடவும் iPhone 5 ஆனது சில விடயங்களைக் கையாள்வதில் குறைந்த வேகத்துடனும்குறைந்த வினைத்திறனுடனும் செயற்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தரப்படுத்தலில் Samsung நிறுவனத்தின் Galaxy S4 முன்னிலை பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 19, 2013

Samsung Galaxy S4 - முழு விவரங்கள் (Specifications)



இந்த வருட ஆரம்பத்தில் இருந்து மொபைல் உலகம் காத்திருந்த ஒரு போன் என்றால் அது Galaxy S4 தான். மிக நீண்ட காத்திருப்புக்கு பின் 14/03/2013 வெளியானது இந்த போன். வரும் ஏப்ரல் மாதம் முதல் 155 நாடுகளில் கிடைக்கும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. 

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android v4.2 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. 

இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும். 

LED Flash, Auto Focus, Dual Shot, Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  

அதே போல முன்னாலும் 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை VIDEO CALL போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். இந்த கேமரா மூலமும் Full HD Recording செய்ய முடியும். 

இது 5 Inch Super AMOLED Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, RGB light, Geomagnetic, Proximity, Gyro, Barometer Temperature & Humidity, Gesture ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 2 GB RAM மற்றும் 1.9 GHz Quad-Core Processor கொண்டுள்ளது. சில நாடுகளில்   இது 1.6 GHz Octa-Core Processor உடன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. 

இதன் Internal MeMORY 16/32/64 GB அளவில் இருக்கும். . 64GB வரை microSD External Memory Card உள்ளிடும் வசதி உள்ளது. அத்தோடு இது 2600 mAh பேட்டரியுடன் வருகிறது. 

இவற்றோடு 3G, 4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில். 

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Samsung Galaxy S4 Specifications:

Operating SystemAndroid 4.2 Jelly Bean
Display5 Inch (1080×1920 pixels) Super AMOLED  Capacitive Touch Screen
Processor1.9 GHz Quad-Core Processor / 1.6 GHz Octa-Core Processor
RAM2 GB RAM
Internal Memory16/32/64 GB
External MemorymicroSD, up to 64 GB
CameraRear Camera: 13 MP, 4128×3096 pixels, autofocus, LED flash
Front Camera: 2 MP, 1080p Recording @30fps
Features: Dual Shot, Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization, HDR
BatteryLi-Ion 2600 mAh
Features3G,4G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

TEACH TO IT Review: 

13 MP கேமரா, 4G என்பது இதன் பெரிய பிளஸ் பாயிண்ட். அத்தோடு RAM மற்றும் Processor இரண்டும் விலைக்கு உகந்ததாக உள்ளது. விலை LKR 93,348.00 இருக்கக்கூடும். 

அதிக விலை கொடுத்து நல்ல போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உகந்த போன் இது.

Friday, March 8, 2013

அப்பில் iOS 6.1 இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியது


கணனி மற்றும் கைப்பேசி உலகில் புரட்சிகளை ஏற்படுத்திவரும் அப்பிள் நிறுவனம் தனது இலத்திரனியல் சாதனங்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இயங்குதளங்களை பயன்படுத்திவருவது தெரிந்ததே.
இவ்வாறிருக்கையில் அண்மையில் அறிமுப்படுத்திய iPhone 5 கைப்பேசியுடன் iOS 6 இயங்குதள பதிப்பை அறிமுகப்படுத்தியிருந்தது.

எனினும் அவ்வியங்குதளத்தில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் நீங்கலாக குறுகிய காலத்தில் மீண்டும் iOS 6.1 எனும் புதிய பதிப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
__

Thursday, February 21, 2013

Micromax Funbook P600 - Voice Call வசதியுடன் உள்ள Android Tablet



Smartphone போலவே Tablet வாங்கவும் நிறைய பேர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்கு உகந்த வகையில் பல நிறுவனங்கள் Tablet - களை வெளியிட்டு வருகின்றன. Micromax நிறுவனம் இதுவரை பல Tablet களை வெளியிட்டுள்ளது. தற்போது அதன் புதிய வெளியீடு Micromax Funbook P600. Voice Call வசதியுடன் வரும் இந்த Android Tablet விலை 
LKR: 22,372.29 ரூபாய்* என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விபரங்களை பார்ப்போம். 

370 கிராம் எடையுடைய இந்த Tablet கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.0 Ice Cream Sandwich - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 2 MP மெயின் கேமராவை பின்னால் கொண்டுள்ளது. அதே போல முன்னாலும்  ஒரு கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 7 Inch TFT Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது.

இது 512 MB RAM, 4 GB ROM மற்றும் 1 GHz Cortex-A5 Dual Core கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 2GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Lithum Polymer வகை பேட்டரியுடன் வருகிறது. 

இவற்றோடு 3G, Wi-Fi. HDMI Port போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே
Micromax Funbook P600 Specifications
Operating SystemAndroid OS 4.0.4 (Ice Cream Sandwich)
Display7.0-inch (480 x 800 pixels) TFT Capacitive Touch screen,16 M Colors
Sim CardYes, Voice call supported
Processor1 GHz Cortex-A5 Dual Core Processor
RAMRAM 512 MB, ROM 4 GB
Internal Memory2 GB
External MemorymicroSD (up to 32GB)
Camera2 MP  Rear Camera, Front camera also available
BatteryLithum Polymer battery. Stand By Time: 224 hrs & Browsing Time: 4 hrs
Features 3G, HDMI, Wi-Fi, Micro USB v2.0

Review:

Voice Call Support இருப்பதால் தான் விலை கொஞ்சம் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன். மற்றபடி சாதாரண Tablet தான் இது. கொஞ்சம் விலை குறைவாக இருந்தால் வாங்கலாம். 

Saturday, February 9, 2013

Smartphone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்



வெறும் பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் அலைபேசியே போதும் எனும் அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் அலைபேசிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட  Smartphone- களை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய தகவலகள் என்ன? பதிவில் அதை பார்ப்போம்.

ஏன் Smartphone ?

உங்களுடைய செயல்கள் அனைத்தையும் ஸ்மார்ட் ஆக செய்ய உதவுகிறது இது. எந்த ஒரு செயலுக்கும் தனித் தனியாக Application என்று கணினி போல இருப்பதால் மிக எளிதாக உங்கள் வேலை முடிந்து விடும். Smartphone- இல் பெரும்பாலான பயன்பாடுகள் இணையம் சார்ந்தே இருக்கும். உங்கள் தினசரி வேலையில் இருந்து, உங்கள் தொழில் வரை அனைத்துக்கும் உதவும் வகையில் செயல்படுகின்றன. எங்கே இருந்து வேண்டுமானாலும், நீங்கள் நினைத்த வேலையை செய்து முடித்திடலாம்.

விலை (Price) :

எல்லோருக்கும் முதலில் இதை சொல்லி விடுவது உத்தமமாய் இருக்கும். முதலில் நீங்கள் எவ்வளவிற்கு வாங்க போகிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதன் பின் கீழே உள்ளவற்றை பொறுத்து உங்கள் பணத்திற்கு ஏற்ப ஒரு அலைபேசி வாங்கி விடலாம். 

இயங்கு தளம் (Operating System) :


எந்த ஒரு ஸ்மார்ட்போனும் ஏதேனும் ஒரு இயங்கு தளத்தில் (OS) தான் இயங்கும். இதில் பிரபலமானவை iOS, Android, Windows, Blackberry, Symbian. இதில் iOS என்பது ஆப்பிள் நிறுவன அலைபேசிகளில் மட்டும், Blackberry என்பது Blackberry நிறுவன அலைபேசிகளில் மட்டும், Symbian என்பது நோக்கியா அலைபேசிகளில் மட்டுமே. 

இதில் ஆப்பிள் விலை பற்றி சொல்லவே வேண்டாம், கொஞ்சம் அதிகம் பணம் உள்ளவர்கள் தான் வாங்க முடியும் என்ற போதும் இதன் மிகப் பெரிய பலன் Upgrade வசதி. நீங்கள் எப்போது வாங்கி இருந்தாலும், புதிய Version OS  வெளியாகும் போது அதற்கு Upgrade வசதி தரப்படுகிறது. இதனால் புதிய வசதிகளை எளிதாக பெற முடியும். 

அதே போல தான் Blackberry, ஆப்பிளை விட விலை குறைவு என்ற போதிலும், இதன் கட்டமைப்பு, பயனர் இடைமுகப்பு (User Interface) போன்றவை எல்லாரும் பயன்படுத்த உகந்ததாக இல்லை என்பது ஒரு குறை. இது Business சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகப் பொருத்தமான அலைபேசி. இதிலும் Upgrade வசதி வழங்கப்படுகின்றன. 

2010 ஆம் ஆண்டு வரை Smartphone உலகின் ராஜாவாக இருந்த Symbian, அதன் பின்னர் Android வளர்ச்சியால் அடிவாங்க ஆரம்பித்து, இன்று அடியோடு நின்றுவிட்டது. இதை வாங்குவதை தவிர்ப்பது நலம்.

அடுத்த நிறைய பேரின் வேட்கையான ஆன்ட்ராய்ட் (Android), இந்தியர்களின் ஸ்மார்ட்போன் கனவை நனவாக்கியது இது தான். விலை குறைவு, அதிக வசதிகள், பெரும்பாலும் இலவசம் என்ற அதிரடிகளுடன் மிகப் பெரிய மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து வருவதால் கூகுளின் இந்த பிள்ளை நன்றாகவே வளர்கிறது. இதில் ஒரு பிரச்சினை குறிப்பிட்ட மாடல் அலைபேசி ஒன்றை நீங்கள் வாங்கும் போது Upgrade என்பது எல்லா முறையும் கிடைக்காது. உதாரணமாக 2.3 OS வந்த போது வாங்கியவர்கள் பெரும்பாலும் 4.1  OS வரை Upgrade செய்ய வாய்ப்பு பெற்றார்கள். ஆனால் அதற்கு பிறகு கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. இந்த கேள்விக்குறி கூட இல்லாமல் 2.3 OS - யில் நின்று விட்டவர்கள் பலர். ஆனால் Upgrade எல்லாம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் 2.3 OS இருந்தால் ஒரு ஆன்ட்ராய்ட் போனை கண்டிப்பாக வாங்கலாம். அதற்கு கீழ் போக வேண்டாம். 

அடுத்து Windows OS. நம் கணினியில் இயங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான இது போன் மாடல்களினால் தடுமாறி வருகிறது. இயங்கு தளத்தில் பிரச்சினை இல்லை என்ற போதும் Phone Specification இதை வாங்க வேண்டுமா என்று உங்களை யோசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். ஆனால் மிக எளிதான Interface, செயல்பாடை விரும்புபவர்கள் இதை வாங்கலாம். குறைந்தபட்சம் 7.5 தெரிவு செய்யவும். 

வடிவமைப்பு, டிஸ்ப்ளே  (Body, Display): 



ஒரு போன் வாங்கும் அது பார்க்க எப்படி உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் எடை, அளவு போன்றவை Body என்பதன் கீழ் வரும். இதில் நீங்கள் குறிப்பாக கவனிக்க வேண்டியது. எடை. பெரும்பாலும் எடை குறைவாக இருக்கும்படி பார்க்கவும். 

அடுத்து Display, இது மிக முக்கியமான ஒன்று. எப்படியும் Touch Screen போன் தான் வாங்க போகிறீர்கள். அப்படி என்றால் அது என்ன வகை என்று நீங்கள் பார்க்க வேண்டும். Resistive, Capacitive என்ற இரண்டு வகை உள்ளன. இதில் நீங்கள் சமரசமே இல்லாமல் தெரிவு செய்ய வேண்டியது Capacitive Touch Screen. தப்பித் தவறி Resistive வாங்கி விட்டால், இங்க் ரப்பர் பயன்படுத்துவது போலத்தான், போனை போட்டு தேய்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்றபடி Capacitive தெரிவு செய்யும் நீங்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்ப TFT, AMOLED மற்றும் பல  Features கிடைக்கும். அதோடு நீங்கள் வாங்கும் போன் MultiTouch Support செய்கிறதா என்று கேட்டுக் கொள்ளுங்கள், குறைந்த பட்சம் இரண்டு விரல்கள் கட்டாயம் தேவை. விளையாட்டு ரசிகர்களுக்கு இது அவசியம்.  

Display Size என்பது உங்கள் விருப்பம். ஆண் என்றால் 4 இஞ்ச்க்கு மேல் வாங்கினால் எங்கே வைக்க போகிறீர்கள் என்று யோசித்து வாங்க வேண்டும். ஏன் என்றால் சில நேரங்களில் பெரிதாக வாங்கி விட்டால் பிறகு உங்கள் போனுக்கு தனியாக அளவெடுத்து பாக்கெட் தைக்க வேண்டி வரலாம். பெண்களுக்கு பிரச்சினை இல்லை. iPad போல 10 இஞ்ச் என்றாலும் வாங்கி வைத்துக் கொள்ளலாம். 

நினைவகம் (Memory) : 


அடுத்து மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இது. Smartphone - கள் கணினி போலவே RAM, Internal Memory போன்றவற்றோடு வருகின்றன. எனவே உங்கள் விலைக்கு எது சிறந்தது என்று பார்த்து வாங்க வேண்டும். RAM 512MB குறைந்த பட்சம் இருந்தால் நலம், அதே போல Internal Memory குறைந்த பட்சம் 150 - 200 MB அவசியம். 

External Memory பெரும்பாலும் MicroSD Card Support செய்வதாக வந்து விட்டது. அது 32GB வரை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

கேமரா (Camera): 


பெரும்பாலும் எந்த Phone வாங்கும் போதும் கவனிக்க வேண்டிய விஷயம் இது. எத்தனை மெகா பிக்ஸல் கேமரா என்று முடிவு செய்து கொண்டு வாங்க வேண்டும். அதோடு உங்களுக்கு Flash முக்கியமானதாக இருந்தால் அதையும் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் இரவில் படம் எடுக்கும் போது உங்களுக்கு சிரமம்.

Video Recording என்பதையும் இதில் கவனிக்க வேண்டும். 5MP Camera என்றாலே 720p(தரமான வீடியோ) அளவுக்கு Video Recording வசதி வந்துவிட்டது. 5MP வாங்கி விட்டு VGA Recording(தரம் குறைவான வீடியோ) செய்து கொண்டிருந்தால் வீண்தான். 

வீடியோ Calling வசதி வேண்டும் என்பவர்கள் சிரமப்படாமல் இருக்க Front Camera இருக்கும் போன் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள்.

ப்ராசஸர்  (Processor): 




மிக மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இது. உங்கள் போனுக்கு இதயம் போன்ற பகுதி இது தான். இதில் நான் Chip-set, GPU என்றெல்லாம் குழப்ப விரும்பவில்லை. குறைந்த பட்சம் 800Mhz இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

பாட்டரி (Battery) : 



எல்லாமே சரி. பாட்டரி எவ்வளவு நேரம் தாங்கும் என்பது தான் ஒரு போனுக்கு மிகவும் முக்கியமான விஷயம். இதில் Smartphoneகளுக்கு 1100 போல பத்து நாள்  சார்ஜ் தாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் வாங்கும் பாட்டரி லித்தியம் அயான்(Li-Ion) ஆக இருக்க வேண்டும், அதுவும் குறைந்த பட்சம் 1500 mAh தெரிவு செய்தால் தான் ஒரு நாள் முழுமைக்கும் சார்ஜ் இருக்கும் (உங்கள் பயன்பாடுகளை பொறுத்து).

இணையம் & இணைப்புத்தன்மை (Internet & Connectivity):

நீங்கள் வாங்கும் மொபைல் 3G enabled Phone தானா என்று உறுதி செய்து கொள்வது அவசியம். அதே போல Bluetooth, Wi-Fi, GPS, USB வசதி போன்றவை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். Bluetooth Version குறைந்த பட்சம் 2.1+ EDR ஆக இருத்தல் நலம்.

ப்ரௌசெர் HTML வசதியுடன் வரும், அதே சமயம் Flash இருந்தால் இன்னும் சிறப்பு.

இவையே ஒரு Smartphone வாங்கும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள். வேறு ஏதேனும் முக்கியமாக கவனிக்க வேண்டும் என்று தோன்றினால் கமெண்ட் மூலம் சொல்லுங்கள். உங்களுக்கு வாங்குவதில் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள்.