Monday, June 18, 2012

இதுவரை வெளிவந்தவற்றில் இதுதான் அனைத்து வசதிகளையும் பூரணமாக கொண்ட விண்டோஸ் பதிப்பு இது என்று தெரிவித்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 இன் Release Preview ஐ வெளியிட்டுள்ளது.
விண்டோஸ் 8 இன் நேரடியாக நிறுவும் பதிப்பை (Setup File) இலவசமாக தரவிறக்கம் செய்து பரிசோதிப்பது தொடர்பான விடயங்களை 4தமிழ்மீடியாவின் தொழில்நுட்ப பிரிவில் பார்வையிட்டோம்.

அதன் இணைப்பு - 
விண்டோஸ் 8 இன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய முன் கவனிக்க வேண்டியவை - 1

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8 இன் Release Preview ஐ வெளியிட்டுள்ளது.
இதுவரை வெளி வந்தவற்றில் இதுதான் அனைத்து வசதிகளையும் பூரணமாக கொண்ட விண்டோஸ் பதிப்பு இது என்கிறது மைக்ரோசாப்ட்.

இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விண்டோஸ் 8 இன் இலவச பதிப்பை நீங்கள் பயன்படுத்தி பரிசோதிக்கலாம்.
ஆனால் அதற்கு முன்னர் உங்கள் கணனி விண்டோஸ் 8 ஐ இயக்குவதற்கு ஏற்புடையதாக இருக்கின்றதா என்பதை பரிசோதிக்க வேண்டியது முக்கியமாகும்.

விண்டோஸ் 8 இன் உதவிக்குறிப்பில் Windows 8 FAQ வில் பின்வரும் தகமைகள் கொண்ட கணனியில் விண்டோஸ் 8 ஐ நிறுவ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 GB  RAM
16 GB ஹாட்டிஸ்க் அளவு
1 GHz processor

இவற்றில் விண்டோஸ் 8 இயங்கும் என்ற போதும், 64 பிட் இயங்குதளத்தை இயக்குவதற்கு குறைந்தது 2GHz Ram தேவைப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

இணையத்தில் விண்டோஸ் 8 ஐ தரவிறக்கம் செய்வது எப்படி?

http://windows.microsoft.com/en-US/windows-8/download 

இந்த இணைப்பிற்குச் சென்று ISO image அல்லது நிறுவத் தேவையான வடிவில் தரவிறக்கம் செய்துவிடலாம்.
தற்போது நீங்கள் பயன்படுத்தும் கணனியில் dual-boot  முறையில் ஹாட்டிஸ்க்கின் மற்றுமொரு பதிப்பில் நிறுவுவதற்கு அல்லது பழைய விண்டோஸ் பதிப்பை மேம்படுத்தப் போகின்றீர்கள் என்றால் default Setup program ஐ தரவிறக்கம் செய்வதே நல்லது.

கவனிக்க - விண்டோஸ் 7 இருந்து விண்டோஸ் 8 ஐ மேம்படுத்தும் போது கணனியில் உள்ள மென்பொருட்களை மட்டுமே மீண்டும் நிறுவ வேண்டும்.

ஆனால் விண்டோஸ் XP அல்லது விஸ்டா மேல் விண்டோஸ் 8 நிறுவ முன்னர் மென்பொருட்கள் மற்றும் உங்கள் கோப்புக்கள் அழிந்துவிடும். எனவே கோப்புக்களை பேக்கப் செய்து சேமித்து விட்டு நிறுவத் தொடங்குங்கள்.

கீழுள்ள இணைப்புக்களில் விண்டோஸ் 8 இன் ஏனைய விபரங்களை அறிந்துகொள்ளலாம்

http://windows.microsoft.com/en-US/windows-8/download

http://windows.microsoft.com/en-US/windows-8/release-preview

விண்டோஸ் 8 இன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய முன் கவனிக்க வேண்டியவை - 2

இதுவரை வெளிவந்தவற்றில் இதுதான் அனைத்து வசதிகளையும் பூரணமாக கொண்ட விண்டோஸ்
பதிப்பு இது என்று தெரிவித்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 இன் Release Preview ஐ வெளியிட்டுள்ளது.

விண்டோஸ் 8 இன் நேரடியாக நிறுவும் பதிப்பை (Setup File) இலவசமாக தரவிறக்கம் செய்து பரிசோதிப்பது தொடர்பான விடயங்களை 4தமிழ்மீடியாவின் தொழில்நுட்ப பிரிவில் பார்வையிட்டோம்.

அதன் இணைப்பு - விண்டோஸ் 8 இன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய முன் கவனிக்க வேண்டியவை - 1
இனி விண்டோஸ் 8 இன் ISO பதிப்பை தரவிறக்கம் செய்து நிறுவ வேண்டிய சந்தர்ப்பங்கள் எவை என்பதை இங்கே பார்க்கலாம்.
விண்டோஸ் 8 இன் ISO இமேயை தரவிறக்கம் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்கள்

1. Mac கணினியில் விண்டோஸ் 8 ஐ Boot Camp மென்பொருளை பயன்படுத்தி நிறுவ வேண்டுமாயின் விண்டோஸ் 8 இன் ISO பதிப்பை தரவிறக்கம் செய்யலாம்.

2. உங்கள் கணினி X64 Processor கொண்ட போதும் 32 பிட் விண்டோஸ் பதிப்பு இயங்குகின்றதா அப்படியாயின் விண்டோஸ் 8 இன் 64 பிட் ஐ நிறுவ விரும்பினால் விண்டோஸ் 8 இன் ISO பதிப்பை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

ஏனைய சில விடயங்களை இத்தொடரின் பகுதி 3ல் காணலாம்.

விண்டோஸ் 8 இன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய முன் கவனிக்க வேண்டியவை - 3

இதுவரை வெளிவந்தவற்றில் இதுதான் அனைத்து வசதிகளையும் பூரணமாக கொண்ட விண்டோஸ் பதிப்பு இது என்று தெரிவித்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 இன் Release Preview ஐ வெளியிட்டுள்ளது.
விண்டோஸ் 8 இன் நேரடியாக நிறுவும் பதிப்பை (Setup File) இலவசமாக தரவிறக்கம் செய்து பரிசோதிப்பது தொடர்பான விடயங்களை 4தமிழ்மீடியாவின் தொழில்நுட்ப பிரிவில் பார்வையிட்டோம்.

அதன் இணைப்பு - விண்டோஸ் 8 இன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய முன் கவனிக்க வேண்டியவை - 1

விண்டோஸ் 8 இன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய முன் கவனிக்க வேண்டியவை - 2

 விண்டோஸ் 8 இன் ISO இமேயை தரவிறக்கம் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்கள்
    3. பல கணினிகளில் விண்டோஸ் 8 ஐ நிறுவ வேண்டுமாயின் ISO இமேஜ் கோப்பை தரவிறக்கம் செய்து
    வேறு bootable DVD மூலம் கணினியை ஆரம்பித்து பின்னர் நிறுவிக்கொள்ள முடியும்.
  
    4. விண்டோஸ் XP ஐ மேம்படுத்தல் அல்லது
    Virtual Machine ஆக விண்டோஸ் 8 ஐ நிறுவிக்கொள்ளவும் ISO வை பயன்படுத்தலாம்.
  
விண்டோஸ் 8 யுனிவெர்ஷல் லைசென்ஸ் கீ எது?

விண்டோஸ் 8 ஐ நிறுவிய பின்னர் ஆக்டிவேட் செய்ய

TK8TP-9JN6P-7X7WW-RFFTV-B7QPF

என்ற யுனிவெர்ஷல் கீ யை பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
நிறுவ முன்னர் கவனிக்க வேண்டியவை
விண்டோஸ் 8 இன் ISO இமேஜ் ஐ நிறுவ முன்னர் இந்த இணைப்பில் கிடைக்கும் setup utilityஐ ரன் செய்து பரிசோதிக்கலாம்.

மேலும் இந்த இணைப்பில் ஹாட்வேர் தொடர்பான தகவல்களை பெறலாம்.

விண்டோஸ் 8 ஐ நிறுவிக்கொள்வது எப்படி?

விண்டோஸ் 8 ஐ மூன்று வழிகளில் நிறுவிவிடலாம்

1.  install Windows 8 side-by-side  அல்லது Dual boot முறையில் இதில் விண்டோஸ் 8 தற்போது கணினியிலிருக்கும் விண்டோஸிற்கு மேலேயே இயங்கத்தொடங்கும். நீங்கள் விரும்பினால் விண்டோஸ் 8 ஐ பிரதான இயங்குதளமாக வைக்கலாம். எனினும் பின்னர் மாற்ற முடியாது.

2. Virtual Machine முறையில் தற்போது கணினியிலிருக்கும் விடயங்களை மாற்றிவிடாமல் நிறுவிக்கொள்ள முடியும்.

3. அல்லது விண்டோஸ் 8 தற்போது இருக்கும் விண்டோஸிற்கு மேலே overwriting  செய்வதன்மூலம் நிறுவலாம்.
    
0 comments: