Sunday, December 30, 2012

Google Drive என்றால் என்ன ?




 கூகிள் நிறுவனம் தனது Google Docs சேவையினை மேம்படுத்தி கூகிள் ட்ரைவ் (Google Drive) என்னும் புதிய சேவையினை தொடங்கியுள்ளது. இது நமது கோப்புகளை இணையத்தில் சேமித்து வைக்க உதவும் மேக சேமிப்பு சேவையாகும்(Cloud storage service).

Google Drive என்றால் என்ன?

நம்முடைய கணினிகளில் Photos, Videos, Documents என பல்வேறு கோப்புகளை சேமித்து வைத்திருப்போம். தேவைப்படும் போது அதனை பார்ப்போம். ஆனால் வெளியிடங்களுக்கோ, வெளியூர்களுக்கோ சென்றால் அவற்றை பார்க்க முடியாது. Laptop, Mobile Phones உள்ளவற்றை மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும். அதற்கு தீர்வாக வந்தது தான் மேகக் கணிமை (Cloud Computing) தொழில்நுட்பம். Google Drive சேவையும் இந்த தொழில்நுட்பத்தைத் தான் பயன்படுத்துகிறது.

 இந்த தொழில்நுட்பம் மூலம் நம்முடைய கோப்புகளை இணையத்தில் சேமித்து வைக்கலாம். மேலும் நாம் எங்கு சென்றாலும் அவற்றை அணுக முடியும். உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் இருக்கும் போது ஒரு வீடியோவை Google Driveவில் பதிவேற்றம் செய்கிறீர்கள். பிறகு வெளியூருக்கு செல்லும்போது Google Drive மூலம் உங்கள் Mobileகளிலோ, அல்லது கணினிகளிலோ அதனை பார்த்துக் கொள்ளலாம்.

இந்த  Cloud Storage சேவையினை Apple, Box.net, Dropbox, Microsoft என பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகிறது. தற்போது அந்த பட்டியலில் கூகிளும் சேர்ந்துள்ளது.

 Google Drive என்பது கணினி மற்றும் மொபைல்களுக்கான மென்பொருளாகும். தற்போது ஒவ்வொரு பயனாளர்களுக்கும் 5GBசேமிப்பகத்தை இலவசமாக தருகிறது. அதற்கு மேல வேண்டுமென்றால் பணம் கட்டி பெற்றுக் கொள்ளலாம். 

சிறப்பம்சங்கள்:

  •  Google Drive மூலமாக தனியாகவோ, நண்பர்களுடன் சேர்ந்தோ புதிய ஆவணங்களை உருவாக்கலாம். அதனை மற்றவர்களுடன் பகிரலாம்.

  • Files நேரடியாக Google+ தளத்தில் பகிரலாம்.

  • HD Video, Photoshop கோப்புகளை அந்தந்த மென்பொருள்கள் இல்லாமலேயே திறந்து பார்க்கலாம்.

  • Google Drive மூலமாகவே பல்வேறு மென்பொருள்களை பயன்படுத்தலாம்.

இன்னும்  பல்வேறு வசதிகள் இருக்கின்றன. எப்போதும்  போலவே தற்போதும் இந்த வசதியை சிலருக்கு மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களுக்கு கிடைத்துள்ளதா? என்பதை பார்க்க https://drive.google.com/ என்ற முகவரிக்கு சென்று கூகிள் கணக்கு மூலம் உள்நுழையவும்.

 Get started with 5GB என்று இருந்தால் கிடைத்துவிட்டது என்று அர்த்தம். அதனை கிளிக் செய்து கணினிக்கான மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். Notify Me என்று இருந்தால் இன்னும் உங்களுக்கு ஆக்டிவேட் ஆகவில்லை என்று அர்த்தம். 

அதனை கிளிக் செய்தால் உங்கள் கணக்கிற்கு Google Drive கிடைத்ததும் மின்னஞ்சல் அனுப்புவார்கள்.

எனக்கும் இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்ததும் அதனிப் பயன்படுத்துவது பற்றி இறைவன் நாடினால் தனி பதிவாக எழுதுகிறேன். 

Update: எனக்கு Google Drive கிடைத்துவிட்டது. விரைவில் பதிவெழுத முயற்சி செய்கிறேன்.

Thursday, December 20, 2012

Software எதுவும் இல்லாமல் CD/DVD Burn செய்வது எப்படி?


என்ன தான் Pen Drive, Memory Card என்று வந்துவிட்ட போதிலும் இன்னும் நம்மில் பலர் CD, DVD - களை பயன்படுத்தி வருகிறோம். சில சமயங்களில் அவசரமாக CD அல்லது DVD ஒன்றை Burn செய்ய வேண்டி இருக்கும். ஆனால் நம்மிடம் எந்த மென்பொருளும் இருக்காது. அவ்வாறான சமயங்களில் எப்படி மென்பொருள் இல்லாமல் Burn செய்வது என்று பார்ப்போம். 

Windows 7, Vista:


1. DVD or CD - ஐ கணினியில் Insert செய்து விடுங்கள். 

2. உங்கள் My Computer பகுதியில் உள்ள CD Drive ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். 

3. இப்போது நீங்கள் எந்த File - களை Burn செய்ய வேண்டுமோ அவற்றை Cd Drive - இல் Drag செய்து விடவும். 

4. இப்போது கீழே படத்தில் உள்ளது போல இடது பக்க மெனுவில் உள்ள படி ரைட் கிளிக் செய்து "Burn to Disc" என்பதை கொடுங்கள். 



5. இப்போது Next என்பதை கிளிக் செய்து Burn செய்ய ஆரம்பியுங்கள். 

6. CD or DVD க்கு உங்கள் பெயர் கொடுக்க வேண்டும் என்றால், Burn செய்யும் முன்பே Rename செய்து விடவும். 

Windows XP:


1. DVD or CD - ஐ கணினியில் Insert செய்து விடுங்கள்.

2. உங்கள் My Computer பகுதியில் உள்ள CD Drive ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்.

3. இப்போது நீங்கள் எந்த File - களை Burn செய்ய வேண்டுமோ அவற்றை Cd Drive - இல் Drag செய்து விடவும்.

4. இப்போது இடது பக்கம் வரும் "Write these files to CD" என்பதை கிளிக் செய்யுங்கள்.



5. இப்போது CD Writing Wizard பகுதிக்கு வருவீர்கள். அதில் Disc பெயர் கொடுக்கவும். அடுத்து Next கிளிக் செய்யுங்கள்.



அவ்வளவு தான். ஏதேனும் பிரச்சினை என்றால் கீழே கேளுங்கள்.

Sunday, December 16, 2012

உலகப் புகழ் "ரூபிக்"


Picture

1974 ம் வருடம் ஹங்கேரி (Hungary) நாட்டினைச் சேர்ந்த பல்கலைக்களக பேராசிரியர் யுர்நோ ரூபிக் ( Ernő Rubik) என்பவரால் உலகப் புகழ்பெற்ற "ரூபிக்" (படத்தில்) எனும் பொழுதுபோக்கு(விளையாட்டு) கருவி கண்டுபிடிக்கப்பட்டது. கட்டிடகலைஞரும் வடிவமைப்பாளருமான "யுர்நோ ரூபிக்" தனது காப்புரிமம் செய்யப்பட்ட ரூபிக் விற்பனை மூலமாக பெருமளவுபணத்தினையும் புகழையும் பெற்றுள்ளார். 30 வருடங்களின் மேலாக உலகின் எல்லா மட்டங்களிலுமுள்ள மக்களையும் ஈர்த்துவிட்ட ரூபிக் பற்றிய சுவையான தகவல்கள் வருமாறு.


*       1974 ம் வருடம் பல்கலைக்களகத்தில் முப்பரிமான கற்பித்தல் தேவைக்கு வடிவமைக்கப்பட்ட மாதிரி காட்சிபொருள் "ரூபிக்" எனும் புரட்சிகர கண்டுபிடிப்பாக வரலாற்றில் மாறியது.

*                ரூபிக் (3*3) கட்டையானது 9 சிறு சதுரங்களைக் கொண்ட 6 வித்தியாசமான வர்ணங்களிலால் ஆக்கப்பட்ட முப்பரிமான சதுர குற்றியாகும்.

 *         ஆரம்பத்தில் "மஜிக் கியூப்" (Magic Cube) என அழைக்கப்பட்ட போதிலும் 1980 ம் வருடத்திலிருந்து "ரூபிக்ஸ் கியூப்" (Rubik’s Cube) எனும் பெயர் மாற்றம் பெற்று விற்பனைக்கு வந்தது முதல் இன்றுவரை மாறாது நிலைத்துவிட்டது.

*      1982 ம் வருடம் ஒக்ஸ்போர்ட் அகராதியில் "RUBIK" எனும் சொல் முதல்முதலாக சேர்க்கப்பட்டது.

      ஹங்கேரிய நாட்டில் 1982 ம் வருடம் நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த நபர் (Minh Thai) 22.95 செக்கனில் ரூபிக் தீர்வுகண்டதன் மூலம் முதலாவது உலகசாதனை பதிவு செய்தார்.

 *   ரூபிக் ஆர்வம் காரணமாக பல தொலைக்காட்சி , மேடை நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் சர்வதேசரீதியில் நடைபெறு வருகின்றது. அத்துடன் ரூபிக் பற்றியதான பல மில்லியன் கணக்கிலான புத்தகங்களும் இதுவரைவெளியாகியுள்ளமை இதன் மகிமையை காட்டுவதாக உள்ளது. 1981 ம் வருடம் 12 வயது பிரித்தானிய மாணவன் (Patrick Bossert) எழுதி வெளியிட்ட "உங்களாலும் ரூபிக் புதிர் செய்ய முடியும்" (You Can Do the Cube) எனும் புத்தகம் மட்டும் 1.5 மில்லியன் பிரதிகள் விற்பனையானது குறிப்பிடத்தக்க செய்தி.

   தயாரிப்பு வரிசையில் தங்கம் (பொன்) , வைரம் , mp3 பதிக்கப்பட்ட ரூபிகளும் ஆடம்பர பொருட்களாக தயாரிக்கப்பட்டுள்ளன.
 *    2003 ம் வருடத்திலிருந்து ஆண்டுதோறும் ஹங்கேரி நாட்டில் தொடர்ச்சியாக உலக ரூபிக் சம்பியன் நிகழ்ச்சிகளை ரூபிக் நிறுவனம் நடாத்திவருகின்றது. 

*    மனிதன் மட்டுமல்ல இயந்திர மனிதரும் (ரோபோ) ரூபிக் புதிருக்கு போட்டியிடுவது வழமையாகிவிட்டது.
*   விஞ்ஞானிகள் ரூபிக் மூலமாக ஒக்ரபஸ் (octopus) எனும் கடல்வாழ் விலங்கின் அறிவினை பரிசோதித்துள்ளனர்.

 *     ரூபிகினை அதிகம் பயிற்சி பெற்றவர்கள் 17 தொடக்கம் 45 நகர்வுகளுக்குள் தீர்வு காண்கின்றனர். எனினும் கணித முறையில் இதற்குரிய தீர்வு வழிகள் 43 கூயின்ரிலியன் (43,252,003,274,489,856,000) நகர்வுகள் என கணிக்கப் பட்டுள்ளது. அதாவது ஒருசெக்கனில் ஒரு நகர்வு செய்வீர்களாயின் முழு நகர்வும் செய்துமுடிக்க 1,400 மில்லியன் மில்லியன் வருடங்கள் தேவைப்படுமாம் !.

 *          10 செக்கனிலும் குறைவான காலத்தில் முதல்முதலாக 2007 ம் வருடம் பிரஞ்சு நாட்டினை சேர்ந்த நபர் (Thibaut Jacquinot ) 9.86 செக்கனில் (ரூபிக் புதிர் சரிசெய்ததில்) உலகசாதனை செய்தார். பின்பு 2008 ம் வருடம் நடைபெற்ற சாதனை நிகழ்வில் பிறிதொரு நபர் (Erik Akkersdijk) ரூபிக் கட்டையை சரிசெய்து புதிய உலகசாதனை படைத்தார்.

 *      ஹங்கேரி நாட்டின் 2009 ம் வருட உலக ரூபிக் சம்பியன் போட்டிகளில் 32 நாடுகளைச்சேர்ந்த 300 பேர் பங்குபற்றினர். இம்முறை போட்டிகளில் ஒரு கையினால் மட்டும் , கண் மூடியபடி என ரூபிக் புதிர் வினோத வழிகளிலும் தீர்வுகாணும் போட்டி புகுத்தப்பட்டது.

 *       உலகிலுள்ள சகல தரப்பு மக்களையும் ஆட்டிப்படைக்கும் ரூபிக் புதிர் இன்று இணைய விளையாட்டாகவும் , கணனி விளையாட்டாகவும் மாறிவிட்டது. மேலும் ரூபிக் பயிற்சி செய்யவென வகுப்புகளும் , நேர அளவுகளும் (Rubik's Cube timer ) கூட இணையத்தில் பெருகிவிட்டன.

*    தொடர்ந்து வீறுநடைபோடும் ரூபிக் விற்பனை மூலமாக பலமில்லியன் வருமானத்தினை யுர்நோ பெற்று வருகின்றார். யுர்நோ தனது முதலாவது 3*3 ரூபிக் பின்னதாக மிகவும் சிக்கலான 4*4,5*5 ரூபிக் புதிர்களையும் வடிவமைத்து விற்பனைக்குவிட்டுள்ளார்.  இதுவரை உலகம் முழுவதுமாக 300 மில்லியனிலும் மேலான ரூபிக் கட்டைகள் விற்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக வரலாற்றில் இந்த புதிர் கட்டை மட்டுமேவிளையாட்டுபொருட்களில் அதிகம் விற்பனையானது என்ற சாதனையைபடைத்துள்ளது.

(சிறிய ஒரு கண்டுபிடிப்பு எவ்வாறு உலகத்தினை மாற்றும் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் இருக்கின்றதா?)  (Rubik's Cube (solve the puzzle online)
solving Rubik

 ரூபிக் கட்டை பற்றிய அதிகாரபூர்வ இணையத்தளம் பார்வையிட ( Rubiks.com ).

ரூபிக் கட்டை தீர்வுகாண்பது தொடர்பிலான வீடியோ பதிவு.  (Rubik Cubes For Geeks)

6 Year Old kid Solves Rubiks Cube in 37 Seconds

 Five year old Rubik's Cube champion

 Robot shows how to solve Rubiks Cube

Friday, December 14, 2012

ஆண்ட்ராய்டில் தமிழ்...


ஆண்ட்ராய்டில் போன்களில் தமிழ் படிக்க மினி ஒபேரா மட்டுமே பயன்படுத்தினோம். இப்பொழுது மினி ஒபேராவும் ஆண்ட்ராய்டில் பயன்படுத்த முடியாமல் போய்  விட்டது.


என்ன தீர்வு இதற்கு ?

நம் தாய் மொழி படிக்க முடியாமல் பட்ட கஷ்டம் போதும்.
கீழ்க்கண்ட ப்ரௌசெர்களில் தமிழ் படிக்க முடிகிறது.  எந்த குறையும் இல்லாமல்,  தமிழ் கட்டம் கட்டம் இல்லாமல் அருமையாகப் படிக்க முடிகிறது. 
                                                                
                                                                         Firefox


 





பல நண்பர்களும் இதனைப் பயன்படுத்தி பயன் பெற 
விரும்பினால் ஓட்டளித்து பகிர்ந்து கொள்ளுங்கள்...  

Wednesday, December 5, 2012

அறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்…




ஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் மறந்துவிட்டாலோ பிறரிடம் இருந்து முதலில் வரும் கேள்வி என்ன புத்தி மழுங்கிப் போச்சா என்பதுதான். அந்த அளவிற்கு மனிதர்களுக்கு கட்டளையிடும் தலைமைச் செயலகமான மூளையின் பங்கு முக்கியமானது.
மனிதர்களுக்கு வயசாக வயசாக, ஞாபக மறதி, தோல் சுருக்கம், நடை தளர்ச்சி, மூட்டுவலி இப்படி எத்தனையோ பிரச்சினைகள் வரத்தொடங்கும். அவற்றை தவிர்க்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முதுமையினால் ஏற்படும் நோய்களை ஏற்றுக்கொள்ளும் மனமானது வயசு ஏற ஏற அறிவும் கூட வளறவேண்டும் என்றுதான் நினைக்கிறது.
எனவே வயது முதிர்ச்சியுடன் சேர்த்து, அறிவு முதிர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதற்காக விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்களோட, பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில முத்தான 10 வழிகளை சமீபத்துல ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவைகளை உங்களுக்காகக் கொடுத்துள்ளோம்.
1. ஒரு நாளைக்கு 4 கப் காஃபி
காலையில் எழுந்த உடன் ஆற அமர ருசித்து காஃபி குடியுங்கள். ஏனெனில் காஃபியில் உள்ள கெஃபீன் என்னும் வேதிப்பொருள், மூளையை பாதுகாக்கிறது. நாளொன்றுக்கு நான்கு கப் காஃபி குடித்தால் அல்ஷெய்மர்ஸ் என்ற நினைவாற்றலை பாதிக்கும் நோய் வராமல் தடுக்கப்படுகிறதாம். இந்த மருத்துவத்தன்மையானது, காஃபியில இருக்குற கெஃபீன் லேர்ந்து கிடைக்கிறதா ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் என்னும் வேதிப்பொருள்லேர்ந்து கிடைக்கிறதா என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
2. மூளைக்கு வேலை
எவ்வளவுக்கு எவ்வளவு உங்க மூளையை கசக்கி ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவும் உங்க முதுமைக் காலத்துல அறிவு முதிர்ச்சிக்கு வித்திடுமாம்!. ஒரு புது கணக்குக்கு விடை கண்டுபிடிக்கிறதுல மூளைக்கு கிடைக்குற பலனைவிட, சிக்கல் விளையாட்டுல எல்லா பகுதியையும் ஒன்னா சேர்க்குறதுல கிடைக்குற பலன் ரொம்பக் குறைவாம். குறுக்கெழுத்துப் போட்டியோ அல்லது அதற்கு இணையான மூளைப் பயிற்ச்சி விளையாட்டுகளோ, இவை எல்லாம் மூளையை பெரிதாக மேம்படுத்துகின்றன என்பதை திட்டவட்டமான ஆதாரங்களுடன் வரையறுக்கும் ஆய்வுகள் இதுவரை இல்லை!.
3. மன உளைச்சல் வேண்டாம் (No Tension)
மன உளைச்சலினால் நினைவாற்றல் சக்திக்கு அடிப்படையான மூளையின் ஹிப்போகேம்பஸ் மற்றும் இன்னும் சில பகுதிகளில் விஷத்தன்மையுள்ள பல ரசாயனப் பொருள்கள் கொட்டப்படுகிறதாம். யோகா, நண்பர்களுடன் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், மன உளைச்சல் குறைந்து, நினைவாற்றல் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு
4. நிம்மதியான உறக்கம்
கனவு காண்பதால் மூளை வளர்ச்சியடையும் என்ற அதிசயிக்கத்தக்க உண்மை கண்டறியப்பட்டுள்ளது. கண்களை திறந்து கொண்டே பகல் கனவு காண்பதால் எந்த பிரயோசனமும் இல்லை. சரியான நேரத்தை ஒதுக்கி, உறங்கும்போது, வரும் கனவுகள் ஒருவரின் நினைவாற்றல் மீதான மேற்பார்வை செய்யும் மூளை, தேவையில்லாதவற்றை அழித்து, முக்கியமானவற்றை செப்பனிட்டு பாதுகாக்கிறதாம். ஆனால் சரியான தூக்கமின்மையால் நம் நரம்புத் தொடர்புகளின் (synapses) மீது, ஒரு வித புரதங்கள் தேங்கி, சிந்திக்கும் மற்றும் கல்வி கற்கும் திறன் குறைந்து போகிறதாம். முக்கியமா, வருடக்கணக்கில் சரியான தூக்கமில்லாதவர்களுக்கு, அவர்களின் முதுமையில் அறிவுத்திறன் பெரிதும் குறைந்துவிட வாய்ப்புகள் இருக்கிறதாம்!
5. சுறுசுறுப்பான செயல்பாடு
நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்யவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது மூளை ஆரோக்கியத்தை மிகவும் மேம்படுத்துகிறதாம். நடப்பது, தோட்ட வேலை செய்வது, ஓடுவது இப்படி எதுவாக இருந்தாலும் அரைமணி நேரம் தொடர்ந்து செய்தால் மூளை வளர்ச்சி அதிகரிக்குமாம்.
6. உடல் நலனில் அக்கறை
வருமுன் காத்துக்கொள்ளக் கூடிய நோய்களான, நீரிழிவு நோய் (Type II diabetes), உடல்பருமன், ரத்தக் கொதிப்பு போன்றவை கூட ஒருவரின் மூளையை பாதிக்கின்றனவாம்! உடலளவிலான எல்லா உபாதைகளுமே, மூளையின் கற்கும் திறனையும், நினைவுத்திறனையும் பெரிதும் பாதிக்கின்றனவாம். எனவே உடலை பேணுவதன் மூலம் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
அதிகமாக உண்ணுவதன் மூலம் மூளை சோர்வடைந்து நினைவாற்றல் பாதிக்கிறதாம். அதேசமயம், உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் மிகவும் குறைவாக உட்கொண்டாலும் மூளை பாதிக்கப்படுகிறதாம். அவர்கள் கவனச்சிதறல், குழப்பம் மற்றும் நியாபகச் சக்தி குறைவு போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்களாம். எனவே அதிக நார்ச்சத்துள்ள மிதமான அளவில் கொழுப்பும் புரதமும் உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் செரிமானச் செயல்பாடானது சீராக நடைபெற்று உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை நீண்டகாலம் பாதுகாத்து சரியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
7. மீன் சாப்பிடுங்க
மூளைவளர்ச்சியை அதிகரிப்பதில் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பிற்கு முக்கிய பங்குண்டு. இது மீன்களில் அதிகம் காணப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த விதைகளையும் அதிகம் உண்ணலாம். மீன் எண்ணெய் மாத்திரைகள் தேவையில்லை.
8. மாத்திரைகளை தவிருங்கள்
வைட்டமின், தாது மாத்திரைகள் அப்புறம் சில நினைவாற்றல் மாத்திரைகள் எல்லாம் மூளைவளர்ச்சியை மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் ரத்தக் கொதிப்பு, செரிமானக் கோளாறு, மலட்டுத்தன்மை பிரச்சினைகள், மன உளைச்சல் போன்ற நோய்களும் தோன்றுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tuesday, December 4, 2012

உங்கள் blogspotடை சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்ற



இணையத்தில் நம் சொந்த கருத்துக்களை பகிர இந்த பிளாக்ஸ்பாட் தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது. 

வலைப்பதிவு என்பது என்ன என்று கூட தெரியாமல்  பதிவர்களில் பெரும்பாலானோர்(என்னையும் சேர்த்து) விளையாட்டாக வலைப்பதிவு தொடங்கி பதிவு போடுகிறோம். இப்படி விளையாட்டாக பதிவு போட ஆரம்பித்து நாளடைவில் நாம் விளையாட்டாகா தொடங்கிய வலைப்பதிவு பிரபலமானவுடன் நமக்கென்று ஒரு சொந்த டொமைன் இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றும். 

ஆனால் இப்படி தொடங்கினால் இந்த இப்பொழுது வரும் வாசகர்களை இழந்து விடுவோமோ அல்லது புது டொமைன் வாங்கினால் நாம் தளத்தில் உள்ள அனைத்து விட்ஜெட்டுக்களையும் திரும்பவும் இணைக்கவேண்டுமா என்ற அச்சத்தின் பேரிலேயே பெரும்பாலானோர் டொமைன் வாங்குவதை தவிர்க்கின்றனர். 

கவைலையை விடுங்கள் பிளாக்ஸ்பாட்டை சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்றுவது எவ்வாறு என்று கூறுகின்றேன். இதை செய்ய நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை நம் பிளாக்கிலேயே செய்து முடித்து விடலாம். (ஆனால் ஒன்று மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள் இப்பொழுது உங்கள் பிளாக்கிற்கு இருக்கும் அலெக்சா ரேங்க் புதிய டொமைன் வாங்கினால் இருக்காது)
  • Dassboard - Settings - Publishing -பகுதிக்கு செல்லுங்கள்.
  • சென்று அங்கு உள்ள Custom Domain என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
  • விண்டோவில் உங்களுக்கு வேண்டிய டொமைன் பெயரை சரியாக கொடுக்கவும்.

  • பெயரை கொடுத்து Check Availability என்பதை க்ளிக் செய்யவும். 
  • நீங்கள் கொடுத்த URL காலியாக இருந்தால் yourdomain.com is available என்ற செய்தி வரும் இல்லையேல் உங்களுக்கு கொடுத்த பெயருக்கு சார்ந்து உள்ள URL கொடுக்கும் அதில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.
  • அடுத்து வரும் விண்டோவில் Continue to registration என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் உங்களின் தகவல்களை சரியாக பொருத்தி accept கொடுக்கவும்.
  • அடுத்து payment செய்யும் விண்டோ வரும் இதில் உங்களின் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டின் எண்ணை சரியாக கொடுத்து உங்களுடைய domain உருவாக்கி கொள்ளுங்கள்.
  • கீழே உள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும். 

அவ்வளவு தான் இனி உங்களுடைய பிளாக்ஸ்பாட் URL கொடுத்தால் நேரடியாக உங்கள் புதிய டொமைன் url தளம் ஓபன் ஆகும். ஆகையால் உங்கள் வாசகர்களுக்கும் எந்த கடினமும் இருக்காது.

Saturday, December 1, 2012

Bloggerகு ஏன் டொமைன் பெயர்(.com .net .org) வாங்க வேண்டும் அதன் அவசியம் என்ன?


பெரும்பாலான பதிவர்களிடம் உள்ள ஒரு கேள்வி நாம் ஏன் .com வாங்க வேண்டும் ஓசியில கிடைக்குறத விட்டுட்டு நாம் எதற்க்காக பணம் செலவழித்து டொமைன் வாங்க வேண்டும் அதை வாங்கினால் நமக்கு என்ன பயன் இப்படி பல்வேறு வகையான சந்தேகங்கள் அவர்களுக்கு உள்ளது. 

நாம் ஏன் .காம் வாங்க வேண்டும் என்று கீழே சில கருத்துக்களை பகிர்ந்துள்ளேன். 

அதை படித்து பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள் .காம் வாங்கலாமா இல்லை வேண்டாமா என்று.

1) உழைப்பை வீணாக்காதீர்

நண்பர்களே நீங்கள் உங்களுடைய பொன்னான நேரத்தை செலவழித்து இணையத்தில் இருந்தோ அல்லது நீங்கள் அனுபவித்த தகவல்களையோ சேகரித்து பதிவாக போடுகிறீர்கள். உங்களுடைய பிளாக் அடைந்த வளர்ச்சி முழுக்க முழுக்க உங்களின் உழைப்பினால் உருவானது. உங்கள் பிளாக்கிருக்கு கிடைத்த வெற்றி என்பது உங்களின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம். 

ஆனால் நீங்கள் எவ்வளுவு பெரிய வளர்ச்சிக்கு உங்களின் blogspot தளத்தை உருவாக்கினாலும் அந்த பிளாக் உங்களுக்கு தான் சொந்தம் இதில் யாரும் சொந்த கொண்டாட முடியாது என்று உங்களால் கூற முடியாது. நாளைக்கே திடீரென blogger தளம் மூட பட்டால் உங்களின் வருடக்கனக்கான உழைப்பு ஒரே நாளில் வீணாகி விடும். பின்பு நீங்கள் திரும்பவும் 0 வில் இருந்து ஆரம்பித்து இந்த நிலையை அடைவது மிகவும் கடினம். 

ஆனால் உங்களுடைய தளம் .Com ஆகா இருந்தால் பிளாக்கர் தளம் முடக்கப்பட்டாலும் நீங்கள் எந்த கவலையும் கொள்ள வேண்டியதில்லை வேறு ஏதாவது ஹோஸ்டிங் உபயோகித்து நம் பிளாக்கை நடத்தலாம். உங்களுடைய வாசகர்களை நீங்கள் இழக்க வேண்டியதில்லை. மற்றும் உங்களுடைய வருட கணக்கான உழைப்பும் வீணாகாது.

2) பணம் அதிக செலவாகாது:

டொமைன் பெயர் வாங்கினால் நாம் அதிகம் செலவழிக்க வேண்டும் மாதம் மாதம் பணம் கட்டியாக வேண்டும் அப்படின்னு நினைக்க வேண்டாம். இந்த டொமைன் வாங்க நீங்கள் அதிக பட்சம் வருடத்திற்கு 500 செலவழித்தால் அதுவே அதிகம். அப்படி என்றால் ஒரு நாளைக்கு எவ்வளுவு பாருங்கள் 2 ரூபாய்க்கும் குறைவாக தான் வரும். எதேதுக்கோ வீண் செலவு செய்யும் உங்களுக்கு இது ஒரு தொகையே இல்லை. ஆகவே சிறிது பணத்தை பொருட்படுத்தாமல் டொமைன் பெயர் வாங்கி விடுவது சிறந்தது.


3) ஹாக் செய்தாலும் கவலை இல்லை:

நீங்கள் பிளாக்கை நடத்தி கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு வேண்டாதவர் யாரோ உங்களுடைய பிளாக்கை ஹாக் செய்து விடுகிறார்கள் என வைத்து கொள்வோம் உங்களுடைய டொமைன் பெயர் வேறொரு ஐடியில் இருந்தால் போதும் எத்தனை முறை ஹாக் செய்தாலும் நீங்கள் வேறொரு பிளாக் ஆரம்பித்து இந்த டொமைன் பெயரை உபயோகித்து கொள்ளலாம்.

இதனால் உங்களின் அலெக்சா ரேங்க் மற்றும் STATS ஆகியவற்றில் பெரிய மாற்றம் ஏற்படாது. ஆனால் நீங்கள் பதிவுகளை Backup எடுத்து வைத்திருப்பது அவசியமாகிறது.

4) வாசகர்கள்,பாலோயர்ஸ் இழக்க நேரிடுமா
நீங்கள் உங்கள் பிளாக்கின் URL மாற்றுவதால் பழைய வாசகர்களுக்கு தெரியாமல் போய்விடும் என நினைக்க வேண்டாம். உங்களுடைய பழைய URL கொடுத்தால் புதிய பிளாக் வரும்படி Redirect செய்து கொள்ளலாம்.

Google மூலம் டொமைன் வாங்கினால் இதை கூட நாம் செய்ய வேண்டியதில்லை அவர்களே செய்து கொடுத்து விடுவார்கள். இதனால் நீங்கள் உங்களின் வாசகர்களையும், பின்தொடர்பவர்களையும் இழக்க வேண்டியதில்லை. ஆனால் உங்களின் நண்பர்கள் உங்களுடைய பிளாக்கின் பழைய முகவரியை கொடுத்து Bloglist பகுதியில் சேர்த்து இருந்தால் உங்களுடைய புதிய தளத்தின் அப்டேட்ஸ்கள் அவர்களுக்கு செல்லாது. அவர்களிடம் மட்டும் புதிய URL மாற்றி கொள்ள சொல்ல வேண்டும்.


5)கூகுள் மூலம் டொமைன் வாங்கினால் கிடைக்கும் சில கூடுதல் வசதிகள்:
பிளாக்கர் பதிவர்கள் சுலபமாக டொமைன் வாங்க ஏதுவாக உங்களின் பிளாக்கர் தளத்திலேயே டொமைன் வாங்கும் வசதியை கூகுள் கொடுத்துள்ளது. 

அதன் மூலம் நீங்கள் டொமைன் வாங்கினால் $10 செலவழிக்க  வேண்டும். மற்றும் இதில் கூடுதல் வசதியாக உங்கள் டொமைன் பெயரில் 10 ஈமெயில்(admin@domain.com) ஐடியை உருவாக்கி கொள்ளும் வசதி. மற்றும் sub domain உருவாக்கி கொள்ளும் வசதி என சில கூடுதல் வசதிகளும் வழங்கு கின்றனர்.

அதுமட்டு மில்லாமல் நீங்கள் டொமைன் வாங்கிவிட்டால் போதும் தானாக Redirect ஆகிவிடும். நீங்கள் எந்த செட்டிங்க்ஸ் செய்ய வேண்டியதில்லை. இதில் உள்ள ஒரே குறை கிரெடிட் கார்டு வைத்திருந்தால் தான் கூகுள் மூலம் டொமைன் வாங்க முடியும்.

நண்பர்களே டொமைன் வாங்குவதன் பற்றிய முக்கியத்துவத்தை மேலே பகிர்ந்துள்ளேன். 

பதிவர்கள் உங்களுக்கு டொமைன் வாங்க வேண்டுமா இல்லையா என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.