1974 ம் வருடம் ஹங்கேரி (Hungary) நாட்டினைச் சேர்ந்த பல்கலைக்களக பேராசிரியர் யுர்நோ ரூபிக் ( Ernő Rubik) என்பவரால் உலகப் புகழ்பெற்ற "ரூபிக்" (படத்தில்) எனும் பொழுதுபோக்கு(விளையாட்டு) கருவி கண்டுபிடிக்கப்பட்டது. கட்டிடகலைஞரும் வடிவமைப்பாளருமான "யுர்நோ ரூபிக்" தனது காப்புரிமம் செய்யப்பட்ட ரூபிக் விற்பனை மூலமாக பெருமளவுபணத்தினையும் புகழையும் பெற்றுள்ளார். 30 வருடங்களின் மேலாக உலகின் எல்லா மட்டங்களிலுமுள்ள மக்களையும் ஈர்த்துவிட்ட ரூபிக் பற்றிய சுவையான தகவல்கள் வருமாறு.
* 1974 ம் வருடம் பல்கலைக்களகத்தில் முப்பரிமான கற்பித்தல் தேவைக்கு வடிவமைக்கப்பட்ட மாதிரி காட்சிபொருள் "ரூபிக்" எனும் புரட்சிகர கண்டுபிடிப்பாக வரலாற்றில் மாறியது.
* ரூபிக் (3*3) கட்டையானது 9 சிறு சதுரங்களைக் கொண்ட 6 வித்தியாசமான வர்ணங்களிலால் ஆக்கப்பட்ட முப்பரிமான சதுர குற்றியாகும்.
* ஆரம்பத்தில் "மஜிக் கியூப்" (Magic Cube) என அழைக்கப்பட்ட போதிலும் 1980 ம் வருடத்திலிருந்து "ரூபிக்ஸ் கியூப்" (Rubik’s Cube) எனும் பெயர் மாற்றம் பெற்று விற்பனைக்கு வந்தது முதல் இன்றுவரை மாறாது நிலைத்துவிட்டது.
* 1982 ம் வருடம் ஒக்ஸ்போர்ட் அகராதியில் "RUBIK" எனும் சொல் முதல்முதலாக சேர்க்கப்பட்டது.
* ஹங்கேரிய நாட்டில் 1982 ம் வருடம் நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த நபர் (Minh Thai) 22.95 செக்கனில் ரூபிக் தீர்வுகண்டதன் மூலம் முதலாவது உலகசாதனை பதிவு செய்தார்.
* ரூபிக் ஆர்வம் காரணமாக பல தொலைக்காட்சி , மேடை நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் சர்வதேசரீதியில் நடைபெறு வருகின்றது. அத்துடன் ரூபிக் பற்றியதான பல மில்லியன் கணக்கிலான புத்தகங்களும் இதுவரைவெளியாகியுள்ளமை இதன் மகிமையை காட்டுவதாக உள்ளது. 1981 ம் வருடம் 12 வயது பிரித்தானிய மாணவன் (Patrick Bossert) எழுதி வெளியிட்ட "உங்களாலும் ரூபிக் புதிர் செய்ய முடியும்" (You Can Do the Cube) எனும் புத்தகம் மட்டும் 1.5 மில்லியன் பிரதிகள் விற்பனையானது குறிப்பிடத்தக்க செய்தி.
* தயாரிப்பு வரிசையில் தங்கம் (பொன்) , வைரம் , mp3 பதிக்கப்பட்ட ரூபிகளும் ஆடம்பர பொருட்களாக தயாரிக்கப்பட்டுள்ளன.
* 2003 ம் வருடத்திலிருந்து ஆண்டுதோறும் ஹங்கேரி நாட்டில் தொடர்ச்சியாக உலக ரூபிக் சம்பியன் நிகழ்ச்சிகளை ரூபிக் நிறுவனம் நடாத்திவருகின்றது.
* மனிதன் மட்டுமல்ல இயந்திர மனிதரும் (ரோபோ) ரூபிக் புதிருக்கு போட்டியிடுவது வழமையாகிவிட்டது.
* விஞ்ஞானிகள் ரூபிக் மூலமாக ஒக்ரபஸ் (octopus) எனும் கடல்வாழ் விலங்கின் அறிவினை பரிசோதித்துள்ளனர்.
* ரூபிகினை அதிகம் பயிற்சி பெற்றவர்கள் 17 தொடக்கம் 45 நகர்வுகளுக்குள் தீர்வு காண்கின்றனர். எனினும் கணித முறையில் இதற்குரிய தீர்வு வழிகள் 43 கூயின்ரிலியன் (43,252,003,274,489,856,000) நகர்வுகள் என கணிக்கப் பட்டுள்ளது. அதாவது ஒருசெக்கனில் ஒரு நகர்வு செய்வீர்களாயின் முழு நகர்வும் செய்துமுடிக்க 1,400 மில்லியன் மில்லியன் வருடங்கள் தேவைப்படுமாம் !.
* 10 செக்கனிலும் குறைவான காலத்தில் முதல்முதலாக 2007 ம் வருடம் பிரஞ்சு நாட்டினை சேர்ந்த நபர் (Thibaut Jacquinot ) 9.86 செக்கனில் (ரூபிக் புதிர் சரிசெய்ததில்) உலகசாதனை செய்தார். பின்பு 2008 ம் வருடம் நடைபெற்ற சாதனை நிகழ்வில் பிறிதொரு நபர் (Erik Akkersdijk) ரூபிக் கட்டையை சரிசெய்து புதிய உலகசாதனை படைத்தார்.
* ஹங்கேரி நாட்டின் 2009 ம் வருட உலக ரூபிக் சம்பியன் போட்டிகளில் 32 நாடுகளைச்சேர்ந்த 300 பேர் பங்குபற்றினர். இம்முறை போட்டிகளில் ஒரு கையினால் மட்டும் , கண் மூடியபடி என ரூபிக் புதிர் வினோத வழிகளிலும் தீர்வுகாணும் போட்டி புகுத்தப்பட்டது.
* உலகிலுள்ள சகல தரப்பு மக்களையும் ஆட்டிப்படைக்கும் ரூபிக் புதிர் இன்று இணைய விளையாட்டாகவும் , கணனி விளையாட்டாகவும் மாறிவிட்டது. மேலும் ரூபிக் பயிற்சி செய்யவென வகுப்புகளும் , நேர அளவுகளும் (Rubik's Cube timer ) கூட இணையத்தில் பெருகிவிட்டன.
* தொடர்ந்து வீறுநடைபோடும் ரூபிக் விற்பனை மூலமாக பலமில்லியன் வருமானத்தினை யுர்நோ பெற்று வருகின்றார். யுர்நோ தனது முதலாவது 3*3 ரூபிக் பின்னதாக மிகவும் சிக்கலான 4*4,5*5 ரூபிக் புதிர்களையும் வடிவமைத்து விற்பனைக்குவிட்டுள்ளார். இதுவரை உலகம் முழுவதுமாக 300 மில்லியனிலும் மேலான ரூபிக் கட்டைகள் விற்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக வரலாற்றில் இந்த புதிர் கட்டை மட்டுமேவிளையாட்டுபொருட்களில் அதிகம் விற்பனையானது என்ற சாதனையைபடைத்துள்ளது.
(சிறிய ஒரு கண்டுபிடிப்பு எவ்வாறு உலகத்தினை மாற்றும் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் இருக்கின்றதா?) (Rubik's Cube (solve the puzzle online)
solving Rubik
ரூபிக் கட்டை பற்றிய அதிகாரபூர்வ இணையத்தளம் பார்வையிட ( Rubiks.com ).
0 comments:
Post a Comment