Saturday, June 29, 2013

தோல்வியடைந்துள்ள IPHONE 5!



ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளின் ஆதிக்கம் இன்று அதிகரித்து வருகின்ற நிலையில் பல கையடக்கத் தெலைபேசி உற்பத்தி நிறுவனங்களும் பலத்த போட்டி போட்டுக் கொண்டு தமது தயாரிப்புகளை புதுப்புதுத் தொழிநுட்பங்களுடன் தயாரித்து அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். 

மாறி மாறி வெளியிடப்படும் கையடக்கத் தொலைபேசிகளின் வருகையானது ஸ்மார்ட் கையடக்கத் தொலை பேசிச் சந்தையினை பெரும் போட்டியுள்ளதாக மாற்றியுள்ளதுடன்ஒவ்வொரு நிறுவனங்களினதும் தயாரிப்புக்கென தனியான பாவனையாளர் ரசிகர் கூட்டம் உருவாகுவதற்கும் வழிவகுத்துள்ளது.

அந்த வகையில் Apple, Samsung, Nokia, Blackberry மற்றும் Sony ஆகிய நிறுவனங்கள் இன்று ஸ்மார்ட் கையடக்கத் தெலைபேசிச் சந்தையில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன் Apple iPhone ஆனது பெரும்பாலும் பலரால் விரும்பிப் பாவிக்கப்படுகின்ற ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில் பலருக்கும் அதிர்ச்சி தரும் விதமாகஅண்மையில் வெளியிடப்பட்டிருந்த ஆய்வொன்றினை அடிப்படையாகக் கொண்ட தரப்படுத்தல் மூலம் iPhone 5 ஆனது அதன் போட்டியாளரான ஏனைய சில தயாரிப்புகளை விடவும் குறைந்த வேகமும், செயற்றிறனும் கொண்டது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Geekbench 2 technical test என்று அழைக்கப்படுகின்ற தொழிநுட்பப் பரிசோதனையானது பிரித்தானியாவின் பிரபல்யம் வாய்ந்த ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளுக்கிடையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளின் பல்வேறு தொழிநுட்ப அம்சங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. இதனடிப்படையில் அதன் போட்டியாளர்களை விடவும் iPhone 5 ஆனது சில விடயங்களைக் கையாள்வதில் குறைந்த வேகத்துடனும்குறைந்த வினைத்திறனுடனும் செயற்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தரப்படுத்தலில் Samsung நிறுவனத்தின் Galaxy S4 முன்னிலை பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி?


நாம் எல்லா சமயங்களிலும் போன்களை நம் கையில் வைத்திருப்பது இல்லை, அப்படியே இருந்தாலும் அதில் இணைய இணைப்பு இருக்கும் என்று சொல்ல முடியாது. நீங்கள் Android பயனராக இருப்பின் ஒரு Application இன்ஸ்டால் செய்ய உங்களிடம் போனில் இணைய இணைப்பு அல்லது போனே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கணினியில் இருந்தே உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யலாம். எப்படி என்று பார்ப்போம்.
உங்களின் Android போன் உங்களிடம் இல்லாத சமயத்தில் அல்லது போனில் இணைய இணைப்பு இல்லாத நேரத்தில் நீங்கள் ஒரு Application ஒன்றை ஏதேனும் ஒரு தளத்திலோ அல்லது நண்பர்கள் மூலமோ அறிய வந்திருப்பீர்கள். உங்களிடம் போன் இல்லாத காரணத்தால் அதை பிறகு இன்ஸ்டால் செய்யலாம் என்று பல சமயங்களில் மறந்து போயிருப்பீர்கள். அம்மாதிரி ஆகாமல் தவிர்க்கவே இந்த பதிவு. Android Tablet களை பயன்படுத்துபவர்களும் இந்த வழியை பின்பற்றலாம்.
குறிப்பிட்ட Application ஒன்றை கணினியில் இருந்து பார்க்கும் போது முதலில் அதன் Google Play பக்கத்திற்கு செல்லுங்கள். உதாரணமாக திங்களன்று நான் எழுதிய Line Application இன் Google Play  பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் இடது புறம் Application பெயர், படத்திற்கு கீழே Install என்று ஒன்று இருப்பதை கவனியுங்கள். [ஏற்கனவே இன்ஸ்டால் செய்திருப்பின் இன்ஸ்டால் செய்யாத ஏதேனும் ஒரு App பக்கத்திற்கு செல்லுங்கள்]
Install
அதை (Install) கிளிக் செய்யுங்கள்.  இப்போது உங்களை Google Play தளத்தில் Sign in செய்யச் சொல்லி கேட்கும். நீங்கள் உங்கள் போனில் பயன்படுத்தும் ஜிமெயில் முகவரியை கொடுத்து Sign in செய்யுங்கள். Sign in செய்த உடன் உங்கள் போன் மாடல் வந்து விடும், அத்தோடு Sign in என்ற இடத்திலும் Install என்று வந்து விடும். [ஏற்கனவே Sign in செய்திருந்தால் நேரடியாக Install என்பது வரும்]
install from pc
இப்போது Install என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது “This app will be downloaded in your device shortly” என்று வந்துவிடும். இனி உங்கள் போனில் இணைப்பு கிடைக்கும் போது Application தானாக டவுன்லோட் ஆகி விடும்.
shot_000003
உடனடியாக டவுன்லோட்தொடங்காவிட்டாலும் சில நிமிடங்களில் தொடங்கி உங்கள் இணைய வேகத்தை பொறுத்து டவுன்லோட் ஆகி விடும்.
குறிப்பு: 
இந்த பதிவு முழுக்க முழுக்க புதிய Android பயனர்களுக்கானது. 

Monday, June 24, 2013

இலவசமாக Call மற்றும் Message செய்ய உதவும் Line Application



Line
ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் இலவச Message அல்லது Call செய்யும் Application களை பயன்படுத்துவார்கள். பெரும்பாலான Application கள் இவற்றில் ஏதேனும் ஒரு வசதியை மட்டுமே பயனர்களுக்கு வழங்கும். அப்படி இல்லாமல் இரண்டையும் தரும் ஒரு பயனுள்ள Application பற்றி இன்று பார்ப்போம்.
Line என்ற இந்த Application மூலம் உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுடன் நீங்கள் பேசலாம் அல்லது இலவசமாக மெசேஜ் செய்யலாம். எந்தவிதமான ஒரு லிமிட்டேஷனும் இல்லாமல் 24 மணி நேரமும் இதை செய்யும் வசதியை Line Application உங்களுக்கு வழங்குகிறது. உலகம் முழுவதும் 15 கோடி பயனர்கள் இந்த Application ஐ பயன்படுத்தி வருகிறார்கள்.
free call and message
நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் Offline – இல் உள்ளார் என்றால் நீங்கள் விஷயத்தை பேசி ரெகார்ட் செய்து அனுப்பலாம். வீடியோ/ஆடியோ என இரண்டு வகையிலும் செய்ய முடியும்.
இது எல்லா Smartphone க்கும் உள்ளது. அத்தோடு Windows மற்றும் Mac கணினிகளிலும் இதை நீங்கள் பயன்படுத்த முடியும்.  உங்கள் போனில் இதை இன்ஸ்டால் செய்யும் போது உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் Register செய்து கொண்டால் உங்கள் கணினியில் இருந்தே நண்பர்களுக்கு call செய்யலாம்.
இவற்றோடு புதிய Status, Photos போன்றவற்றை Timeline என்ற பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பகுதி Social Network போல இயங்கும்.
இதற்கெல்லாம் ஒரே தேவை உங்கள் நீங்களும் உங்கள் நண்பரும் Line – ஐ பயன்படுத்த வேண்டும். அத்தோடு இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
சிறப்பம்சங்கள்: 
  • இலவசமாக Call செய்யும் வசதி. 
  • மிக வேகமான செயல்பாடு. ஒரு சில நொடிகளில் Call/Message சென்றடைகிறது.
  • Chat மூலம் படங்கள், ஆடியோ, வீடியோ அனுப்பும் வசதி
  • Group Chat வசதி
  • கணினிகளிலும் இயங்கும் வசதி
  • முழுக்க முழுக்க இலவசம்.
voice and video message
Android பயனர்கள்: 
முதலில் Line Application பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் Install என்பதை கிளிக் செய்யுங்கள். ஏற்கனவே Google Play தளத்தில் உங்கள் ஜிமெயில் ஐடி மூலம் Sign in ஆகி இருந்தால் அடுத்தும் Install என்று கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் போனில் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை இங்கே கொடுத்து Sign in செய்து பின்னர் இன்ஸ்டால் என்பதை கிளிக் செய்யுங்கள்.  இப்போது உங்கள் போனில் GPRS/Wifi – ஐ Enable செய்தால் App தானாக Download ஆகிவிடும். உங்கள் மொபைலில் இன்ஸ்டால் ஆன பிறகு உங்கள் நம்பர் கொடுத்து உங்கள் Line கணக்கை தொடங்கி விடலாம். நீங்கள் விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் Register செய்து கொள்ளலாம்.
Windows Phone, iPhone, Blackberry மற்றும் Nokia Asha பயனர்கள்:
உங்கள் போனில் App Market சென்று Line என்று தேடி டவுன்லோட் செய்யுங்கள் பின்னர் உங்கள் மொபைல் நம்பர் கொடுத்து Register செய்யுங்கள்.
தரவிறக்க:
  • மொபைல்
    • Android [**Android பயனர்கள்இந்த இணைப்பில் கிளிக் செய்து வரும் பக்கத்தில் Install என்பதை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் போனில் GPRS/Wifi - ஐ Enable செய்து தானாக Download செய்யலாம்**]
    • iPhone
    • Windows Phone 8
    • Blackberry
    • Nokia Asha
டவுன்லோட் செய்து பயன்படுத்துபவர்கள் More >> Add Friends மூலம் புதிய நண்பர்களை சேர்க்கலாம். என்னை சேர்க்க Search By ID என்பதில் prabukrishna என்று தேடுங்கள்.
Android – க்கு QR Code:
Android பயனர்கள் கீழே உள்ள QR Code ஐ உங்கள் போனில் ஸ்கேன் செய்தும் டவுன்லோட் செய்யலாம்.
chart

Monday, June 3, 2013

கணனியிலுள்ள Files துல்லியமாக பேக்கப் செய்வதற்கான மென்பொருள்

கணனியிலுள்ள கோப்புக்களை
கணனிகளால் பல நன்மைகள் காணப்படுகின்ற போதிலும் சில சமயங்களில் அவையே ஆப்பாக மாறிவிடுகின்றன. 

இவற்றுள் கணினி வன்றட்டு கிராஷ் ஆகி அதில் சேமிக்கப்பட்ட கோப்புக்கள், மென்பொருட்கள் போன்றவற்றினை தொலைக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. 

இதனைத் தவிர்ப்பதற்கு சீரான முறையில் கணனி வன்தட்டிலுள்ள கோப்புக்களை பேக்கப் செய்வது பாதுகாப்பான முறையாக கருதப்படுகின்றது.

இவ்வாறு பேக்கப் செய்யும் வசதி விண்டோஸ் இயங்குதளத்துடன் தரப்பட்ட போதிலும் அதனைவிட வினைத்திறனான முறையில் பேக்கப் செய்யும் மென்பொருட்களும் காணப்படுகின்றன.

இவ்வாறான மென்பொருட்களில் AISBackup எனப்படும் மென்பொருளும் சிறந்ததாகக் காணப்படுகின்றது. இதன் மூலம் குறிப்பிட்ட Files, Fileகள், வன்தட்டுக்கள், CD, DVD போன்ற அனைத்து வகையான சேமிப்பு சாதனங்களிலும் காணப்படும் தரவுகளை பேக்கப் செய்ய முடியும்.

இது தவிர பேக்கப் செயன்முறையை குறித்த கால இடைவெளியில் சுயமாகவே செய்யக்கூடியதாகக் காணப்படுவதுடன் பேக்கப் செய்யப்பட்ட தரவுகளை கடவுச்சொற்களைக் கொண்டு பாதுகாக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.

Windows Movie Maker 2012 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு




வீடியோ எடிட்டிங் செய்வதற்காக பல் மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் சொற்பமானவையே இலவசமாகக் கிடைக்கின்றன.

அவ்வாறு இல்லாது இலவசமாகவும், மிக இலகுவாக அனைவராலும் கையாளக்கூடிய வீடியோ எடிட்டிங் மென்பொருளாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows Movie Maker மென்பொருள் காணப்படுகின்றது.

தற்போது இதன் புதிய பதிப்பான Windows Movie Maker 2012 மென்பொருள் இலவசமாகக் கிடைக்கின்றதுடன் இது விண்டோஸ் 7, விண்டோஸ் 8 இயங்குதளங்களிலும் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.


Sunday, June 2, 2013

Mac கணனிகளுக்கான இலவச அன்டிவைரஸை பெற்றுக்கொள்ள......



Mac கணனிகளுக்கான இலவச அன்டிவைர��
அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான Mac இயங்குதளங்களைக் கொண்ட கணனிகள் தனித்துவம் வாய்ந்தவை.

இதன் காரணமாக அனைத்து விதமான கணனி மென்பொருட்களையும் இதில் நிறுவிப் பயன்படுத்த முடியாது என்பது யாவரும் அறிந்ததே.

இதற்கென கிடைக்கும் மென்பொருட்களில் அனேகமானைவை இலவசமாகக் கிடைப்பதில்லை. 

இவ்வாறிருக்கையில் ClamXav எனும் அன்டி வைரஸ் புரோகிராம் ஆனது முற்றிலும் இலவசமாகக் கிடைக்கின்றது.

இம்மென்பொருளானது விரைவாகக் செயற்படக்கூடியதாகவும், இலகுவான பயனர் இடைமுகத்தினைக் கொண்டதாகவும் காணப்படுவதுடன் துல்லியமான முறையில் வைரஸ் புரோகிராம்களை கண்டு அவற்றினை நீக்கக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Saturday, June 1, 2013

பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக்ரோசொப்ட்



பேஸ்புக்கை தாக்கும் புதிய வகை ட்ரொஜன் ஹோர்ஸ் வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளதால் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. 'Trojan:JS/Febipos' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தன்னியக்கமாக Like, Comment மற்றும் Share செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. தற்போது பிரேஸில் மொழியில் பிரேசில் நாட்டில் அதிகளவில் வியாபித்துள்ள இந்த வைரஸ் ஐரோப்பா நாடுகளுக்கும் விரைவில் ஆங்கில மொழியிலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Firefox, Chrom போன்ற இணைய உலாவிகளின் Plug-ins என்ற போர்வையிலேயே இந்த வைரஸ் பரவுவதாகவும் குறித்த வைரஸ் தாக்கிய கணனியின் மூலம் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் அதிலிருந்து ஓரளவு தப்பிக்கவும் சில வழிகளைக் கூறியுள்ளது. 



அதாவது தரவேற்றம் செய்யக் கூறி புதிதாக Firefox, Chrom ஊடாக வரும் Plug-insகளை தவிர்த்தல் மேலும் பேஸ்புக்கினைப் பயன்படுத்திவிட்டு முறைப்படி அதிலிருந்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. இதேவேளை இந்த வைரஸ் விரைவில் பிரேஸில் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கும் பல மொழிகளில் பரவலடையும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகின்றது