Thursday, March 16, 2017

அழிந்த பைல்களை மீண்டும் பெறலாம்- இதோ சூப்பரான சாப்ட்வேர்க


பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் முதல் மருத்துவமனைகளிலும் கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகம். அவசரத்திலோ அல்லது தெரியாமலோ ஏதாவது ஒரு முக்கியமான பைல்(File)-ஐ அழித்துவிட்டால் உடனடியாக நாம் தேடுவது Recycle Bin- ல் தான்.
ஒருவேளை அதிலிருந்தும் அழித்துவிட்டால் என்ன செய்வது?. அதற்கான தொழில்நுட்பம்தான் Recovery Software.
நம் மொபைலிலோ அல்லது கம்ப்யூட்டரிலோ இருந்து அழிக்கப்பட்டவற்றை நாம் இதை பயன்படுத்தி மீண்டும் பதிவு செய்து கொள்ள இயலும்.
Recuva
இது அழிக்கப்பட்ட பைல்களை(File) மீண்டும் பதிவு செய்து கொள்ள உதவும் Software-களில் ஒன்று. இந்த Software-ஐ Windows 10, Windows 8(8.1), Windows XP, Windows 7, Windows Vista போன்ற அனைத்து OS-களிலும் பயன்படுத்தலாம்.
சிறப்புகள்
கையாள்வதற்கு எளிதான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
CD, DVD, Pendrive போன்றவற்றில் அழிக்கப்பட்ட கூட பைல்களை மீண்டும் பதிவு செய்ய இயலும்.
Puran File Recovery Program
இதனை பயன்படுத்தி 50 வகையான பைல்களை(eg. Photo, song,document) மீண்டும் பதிந்து கொள்ளலாம்.
அனைத்து OS-களிலும் இதனை பயன்படுத்த இயலும். ஆனால்,பதிவு செய்யும் பைல்களின் அளவான மிக குறைவே.
இதனால் அலுவலகங்கள் போன்ற இடங்களில் இந்த Software-ஐ பயன்படுத்த முடியாதது இதில் உள்ள குறையாகும்.
பயன்படுத்தும் முறை
முதலில் கம்ப்யூட்டர் போன்றவற்றில் நாம் வேறு ஏதாவது பணி(Task) செய்து கொண்டிருந்தால், அதனை நிறுத்தி விடவேண்டும்.
Recovery Software-ஐ நமது கம்ப்யூட்டரில் பதிந்த கொண்ட பின்னர், அழித்த பைல்கள் தானாகவே Scan செய்து நமக்கு காட்டப்படும். அவற்றில் தேவையான பைல்-ஐ நாம் Restore செய்து கொள்ளலாம்.
இத்தகைய Software –கள் தக்க சமயத்தில் உதவியாக இருந்தாலும், சில சமயங்களில் தீங்கு விளைவிக்கின்றன. எனவே நாம் கவனமாக நம் தகவல்களை கையாள்வதே பாதுகாப்பானதாகும்.

0 comments: