Sunday, September 23, 2012

இலவச கணினி wallpapers டவுன்லோட் செய்ய சிறந்த 20 தளங்கள்



கணினியில் வால் பேப்பர்களை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அனைவரும் நம்முடைய கணினியின் வால்பேப்பர்களை அடிக்கடி மாற்றி அதை  நம் கணினியில் பார்த்து ரசிப்போம். இப்படி அடிக்கடி வால்பேப்பர்களை மாற்றி ரசிப்பவரா நீங்கள் ஆம் என்றால் உங்களுக்கான பதிவு இது. இணையத்தில் வால்பேப்பர்கள் இலவசமாக வழங்க நிறைய இணைய தளங்கள் உள்ளது. அதில் சிறந்த இருபது தளங்களை இங்கு வெளியிடுகிறேன்.



இணையத்தில் மிக அதிகளவிலான இலவச வால்பேப்பர்களை கொண்டு உள்ளது இந்த தளம். இது தான் வால்பேப்பர்களை டவுன்லோட் செய்ய பிரபலமான தளமாகும். இதில் ஆயிரகணக்கான வால்பேப்பர்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான வால்பேப்பர்களை நீங்களே தேடி கொள்ளலாம்.


இந்த தளத்திலும் வால்பேப்பர்கள் குவிந்து கிடக்கின்றன. நமக்கு தேவையான வால்பேப்பர்களை நாமே தேடி பெற்று கொள்ளலாம். இந்த தளத்தில் உள்ள சிறப்பம்சம் இதில் நமக்கு தேவையான resolution படி வால்பேப்பர்களை தேடி பயன்படுத்தி கொள்ளலாம். மற்றும் இந்த தளத்தில் 3D வால்பேப்பர்களையும் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


இந்த தளம் செல்லும் அனைத்து ஆண்களுக்கும் தளத்தை விட்டு வெளியே வரவே மனம் இருக்காது. இதில் பெரும்பாலும் பெண்களின் வால்பேப்பர்களே இருக்கும். பெண்களின் வால்பேப்பர்கள் வேண்டுவோருக்கு இந்த தளம் ஒரு பொக்கிஷமாக இருக்கும். மற்றும் இந்த தளத்தில் எல்லா விதமான வால்பேப்பர்களும் கிடைக்கிறது.

Wall Paper Stock

தளத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரியே இந்த தளத்தில் வால்பேப்பர்கள் மலைபோல் குவிந்து காணப்படுகின்றன. இந்த தளத்திலும் நமக்கு தேவையான குறிச்சொல்லை கொடுத்து நமக்கு தேவையான வால்பேப்பர்களை நாமே டவுன்லோட் செய்து கொள்ளலாம். 

இந்த தளத்தில் வகை வகையாக வால்பேப்பர்கள் பிரித்து வைக்கப்பட்டு உள்ளன. abstract, aircraft, animals, anime, nature, motorcycle இப்படி இன்னும் ஏராளமான பிரிவுகளில் வால்பேப்பர்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த தளத்திலும் நூற்று கணக்கான வால்பேப்பர்கள் உள்ளன. இந்த தளத்தில் நம்முடைய வால்பேப்பர்களையும் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிரலாம்.


இந்த தளத்தில் இயற்க்கை சம்பந்தமான வால்பேப்பர்கள் மிக அற்ப்புதம். பார்த்தவுடனே டவுன்லோட் செய்ய தூண்டும் அளவிற்கு வால்பேப்பர்கள் மிக அழகு. இதிலும் உங்கள் கணினி திரையின் அளவை கொடுத்து அதற்கேற்ற மாதிரி டவுன்லோட் செய்து கொள்ளும் வசதி உள்ளது. 


இதில் உள்ள சிறப்பு அனிமேஷன் வால்பேப்பர்கள் அதிக அளவில் உள்ளது. மற்றும் மேற்கூறிய தளங்களில் உள்ள முக்கியமான வசதிகள் இந்த தளத்திலும் உள்ளது. இது புதிய தளம் என்பதால் பல நவீன வால்பேப்பர்கள் இதில் அடங்கி உள்ளது.


இந்த தளம் வால்பேப்பருக்கான தளமில்லை ஆனால் மிக சிறந்த 15 வால்பேப்பர்கள் இதில் ஒரு பிரிவில் உள்ளது. இந்த 15 வால்பேப்பர்களும் உலகளவில் மிக பிரபலமானவை.



இந்த தளத்திலும் வால்பேப்பர்கள் இலவசமாக கிடைக்கிறது. இதில் உள்ள வால்பேப்பர்கள் அனைத்தும் கேமரா மூலம் எடுக்கப்பட்டவையே. மற்றும் இந்த தளத்தில் ஒவ்வொரு வால்பேப்பர்களுக்கும் தனி தனியே Description காணப்படும். இந்த தளத்திலும் பல அழகான இயற்க்கை காட்சி வால்பேப்பர்கள் காணப்படுகின்றன.


இது ஒரு மிக சிறிய தளமாகும். இந்த தளத்திலும் நமக்கு தேவையான பிரிவில் இருந்து வால்பேப்பர்களை தேடி பெற்று பயன்படுத்தி கொள்ளலாம். 


இந்த தளத்தில் பல தரமான வால்பேப்பர்கள் கிடைக்கும். இந்த தளத்தில் ஸ்க்ரீன் சேவர்களும் இலவசமாக கிடைக்கும். இந்த தளத்தில் கூகுள் அட்சென்ஸ் நிறுவி உள்ளதால் வால்பேப்பர்களின் உண்மையான லிங்கை கண்டறிந்து டவுன்லோட் செய்து கொள்ளவும். 


இதுவும் வால்பேப்பர்களை டவுன்லோட் செய்ய மிகப்பெரிய தளமாகும். இந்த தளம் என்னை மிகவும் கவர்ந்தது ஏனென்றால் இந்த தளத்தில் இந்த வால்பேப்பர் எடுத்த விதம் எடுக்கப்பட்ட தேதி மற்றும் எந்த கேமராவில் இருந்து எடுக்கப்பட்டது எடுத்தவர் யார் போன்ற அனைத்து செய்திகளும் இதில் உள்ளது. இந்த தளத்திலும் நம் கணினி திரைக்கு ஏற்ற அளவில் வால்பேப்பர் டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


நீங்கள் வால்பேப்பர்களின் தீவிர ரசிகர் என்றால் இந்த தளமும் உங்களை வெகுவாக கவரும். இந்த தளத்திலும் இலவச ஸ்க்ரீன் சேவர்களும் கிடைக்கும். இதில் வால்பேப்பர்கள் 30 க்கும் மேற்ப்பட்ட பிரிவுகளாக பிரித்து சேமித்து வைக்கப்பட்டுள்ளன. 


இந்த தளத்தில் வகை வகையாக வால்பேப்பர்கள் பிரித்து வைக்கப்பட்டு உள்ளன. abstract, aircraft, animals, anime, nature, motorcycle இப்படி இன்னும் ஏராளமான பிரிவுகளில் வால்பேப்பர்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த தளத்திலும் நூற்று கணக்கான வால்பேப்பர்கள் உள்ளன. 


இந்த தளத்திலும் வால்பேப்பர்கள் குவிந்து கிடக்கின்றன. நமக்கு தேவையான வால்பேப்பர்களை நாமே தேடி பெற்று கொள்ளலாம். இந்த தளத்தில் உள்ள சிறப்பம்சம் இதில் நமக்கு தேவையான resolution படி வால்பேப்பர்களை தேடி பயன்படுத்தி கொள்ளலாம். 


பார்ப்பதற்கு எதுவுமே இல்லாதது போன்று காணப்படும் கீழே உள்ள பிரிவுகளை க்ளிக் செய்தால் வால்பேப்பர்கள் நிரந்து காணப்படும். 


இந்த தளம் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தளமாகும். இந்த தளத்தில் பல அழகான பாதுகாப்பான வால்பேப்பர்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த தளத்தில் வால்பேப்பர்கள் விண்டோஸ் 7 கணினிகளுக்கு என்று போட்டிருக்கும் ஆனால் அந்த வால்பேப்பர்களை 1995 இருந்து windows7 வரை உள்ள அனைத்து கணினிகளுக்கும் உபயோகிக்கலாம். 


இந்த தளத்தை வால்பேப்பர்களின் குடோன் என்று கூறலாம். அந்த அளவிற்கு இந்த தளத்தில் வால்பேப்பர்கள் கொட்டி கிடக்கிறது. இந்த தளத்தில் சுமார் 27000 வால்பேப்பர்கள் குவிந்து காணப்படுகின்றன. மற்றும் அந்த 27000 வால்பேப்பர்களும் 949 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 


இந்த தளம் செல்லும் அனைத்து ஆண்களுக்கும் தளத்தை விட்டு வெளியே வரவே மனம் இருக்காது. இதில் பெரும்பாலும் பெண்களின் வால்பேப்பர்களே இருக்கும். பெண்களின் வால்பேப்பர்கள் வேண்டுவோருக்கு இந்த தளம் ஒரு பொக்கிஷமாக இருக்கும். மற்றும் இந்த தளத்தில் எல்லா விதமான வால்பேப்பர்களும் கிடைக்கிறது.


இந்த தளத்திலும் சுமார் 20000 வால்பேப்பர்கள் நிரம்பி உள்ளது. மற்றும் மேற்கூறிய தளங்களில் உள்ள அனைத்து வசதியும் இந்த தளத்தில் உள்ளது. மற்றும் பலவேறு பிரிவுகளில் வால்பேப்பர்கள் பிரித்து சேமிக்கப்பட்டுள்ளன. 

டுடே லொள்ளு 
சேன்ஸ்சே இல்லப்பா! நம்ப ராஜா சார் பாட்டு எப்பவுமே A class தான்

Wednesday, September 19, 2012

Glass Technology


 
 
 
தற்போதைய நவீன உலகில், புதுப்புது தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் அறிமுகமாகி நம்மை வியப்பில் ஆழ்த்திக் கொண்டு தான் இருக்கின்றன.
அவ்வாறு புதிதாக வரவிருக்கும் இந்த தொழில்நுட்பம் நமது வாழ்வை முற்றிலுமாக மாற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஒக்டோபரில் வெளிவருகின்​றது விண்டோஸ் 8 இன் முழுமையான பதிப்பு

உலகளாவிய ரீதியில் அதிகளவு கணனிப்பாவனையாளர்களால் பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் ஒன்றான விண்டோஸின் புதிய பதிப்பான விண்டோஸ் 8 இன் முழுமையான பதிப்பை எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதி வெளியிடப்போவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மெட்ரோ பயனர் இடைமுகம் உள்ளடங்கலாக முன்னைய பதிப்புக்களை விட பல்வேறு அம்சங்களை புதிதாகக் கொண்டுள்ள இப்பதிப்பானது ஏற்கணவே பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவ்வியங்குதளத்தின் சோதனைப்பதிப்பானது சில வாரங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வறிவிப்பை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வெளியீட்டிற்கான நிகழ்ச்சி நியூயோர்க்கில் இடம்பெறவுள்ளது.

கணனியின் செயற்திறனை அதிகரிப்பத​ற்கு: Wise Disk Cleaner

தொடர்ச்சியான கணனிப் பாவனையின் காரணமாக வன்றட்டில் பயனற்ற கோப்புக்களும், தற்காலிகமான கோப்புக்களும் அதிகளவில் தங்குகின்றன.
இதனால் வன்றட்டில் அநாவசியமான முறையில் மேலதிக இடம் பயன்படுத்தப்படுவதுடன் அதன் வேகம் குறைவடைவதனால் ஒட்டுமொத்தமாக கணனியின் செயற்திறனும் குறைவடைகின்றது.
எனவே இவ்வாறு அநாவசியமாகக் காணப்படும் பயனற்ற, தற்காலிக கோப்புக்களை சிறந்த முறையில் தேடி அவற்றை நீக்குவதற்கான வசதியை Wise Disk Cleaner எனும் மென்பொருள் தருகின்றது.
இம்மென்பொருளானது அனைத்துவகையான தற்காலிக, பயனற்ற கோப்புக்கள் இருக்கும் இடங்களை விரைவாக தேடுவதுடன் அவற்றினை பாதுகாப்பான முறையில் நீக்குகின்றது.
இதனால் வன்றட்டில் மேலதிக இடம் அதிகரிக்கப்பட்டு அதன் செயற்படுவேகம் அதிகரித்து கணினியின் வினைத்திறனும் அதிகரிக்கின்றது.