Thursday, September 13, 2012

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபோன் 5 வெளியானது

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபோன் 5 ஸ்மார்ட்போனை அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் கூப்பர்டீனோ நகரை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் ஆப்பிள் இன்கார்ப்பரேஷன்.
கணனிகள், மென்பொருள், வன்பொருள், ஐபேட், டேப்லட் கம்ப்யூட்டர், மீடியா பிளேயரான ஐபாட் ஆகியவற்றை தயாரித்து வருகிறது.
பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்களை 2007ஆம் ஆண்டு முதல் தயாரித்து வருகிறது.
முதல் தலைமுறை ஸ்மார்ட்போன் ஐபோன் என்ற பெயரில் 2007ஆம் ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஐபோன் 3ஜி(2008), 3ஜிஎஸ்(2009), ஐபோன்4(2010), 4எஸ்(2011 அக்டோபர்) ஆகியவை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ஐபோன் வரிசையில் 6வது தலைமுறை ஸ்மார்ட்போன் ஐபோன் 5 நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை வந்த மொடல்களைவிட இது நீளமானது, ஒல்லியானது, எடை குறைந்தது, பளபளப்பானது.
கருப்பு, சில்வர் என இரு நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய 4எஸ் மொடல் போலவே 16ஜிபி, 32ஜிபி, 64ஜிபி மாடல்கள் முறையே ரூ.11 ஆயிரம், ரூ.16,500, ரூ.22 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதால் இந்த விலை.
ஸ்மார்ட்போனுக்கே உரித்தான டச் ஸ்கிரீன், ஜிபிஎஸ் வசதி, மீடியா பிளேயர், வீடியோ கமெரா, வை,பி மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதிகள் இதிலும் உண்டு. 7.66 மி.மீ. தடிமன், 112 கிராம் எடை, இன்னும் அதிக தெளிவான ஸ்கிரீன் ஆகியவை சிறப்பு அம்சங்கள்.
லித்தியம் அயான் பாலிமர் பற்றரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்சம் 225 மணி நேரம் வரை பற்றரி சார்ஜ் நிற்கும். பேசினால் 8 மணி நேரம் வரை சார்ஜ் இருக்கும். ஐபோன்5 வாங்குவதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வரும் 21ஆம் திகதி விற்பனை தொடங்குகிறது.

0 comments: