உலகளாவிய ரீதியில் அதிகளவு கணனிப்பாவனையாளர்களால் பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் ஒன்றான விண்டோஸின் புதிய பதிப்பான விண்டோஸ் 8 இன் முழுமையான பதிப்பை எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதி வெளியிடப்போவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மெட்ரோ பயனர் இடைமுகம் உள்ளடங்கலாக முன்னைய பதிப்புக்களை விட பல்வேறு அம்சங்களை புதிதாகக் கொண்டுள்ள இப்பதிப்பானது ஏற்கணவே பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவ்வியங்குதளத்தின் சோதனைப்பதிப்பானது சில வாரங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வறிவிப்பை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வெளியீட்டிற்கான நிகழ்ச்சி நியூயோர்க்கில் இடம்பெறவுள்ளது.
|
0 comments:
Post a Comment