Thursday, September 13, 2012

மெட்ரோ பதிப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் Cache கோப்புக்களை நீக்குவதற்​கு


மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளமானது மெட்ரோ பயனர் இடைமுகத்தைக் கொண்டிருப்பதை அறிந்திருப்பீர்கள்.
இதன் காரணமாக முன்னைய பதிப்புக்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், விண்டோஸ் 8 இயங்குதளமானது சற்று வித்தியாசமான அனுபவத்தை தரக்கூடியதாகக் காணப்படுகின்றது.
இவற்றின் அடிப்படையில் இவ் இயங்குதளத்தில் உள்ள Internet Explorer உலாவியில் காணப்படும் Cache கோப்புக்களை நீக்கும் செயன்முறையும் வித்தியாசமானதாகவே காணப்படுகின்றது.
இதற்காக முதலில் விண்டோஸ் கீயினை அழுத்தி திரையின் ஆரம்ப பகுதிக்கு செல்லவும். பின்னர் Windows + C இனை அழுத்தி Charms barஇனைத் தோற்றுவித்து அதில் Settings charm என்பதை தெரிவு செய்யவும்.
தொடர்ந்து Settings என்பதில் Internet Options இனை தெரிவு செய்யும் போது தோன்றும் விண்டோவில் உள்ள Delete பொத்தானை அழுத்தினால் போதும், அனைத்து விதமான Cache கோப்புக்களும் நீக்கப்பட்டுவிடும்.

0 comments: