Samsung நிறுவனமானது அப்பிளின் Retina iPad Mini டேப்லட்டிற்கு போட்டியாக Galaxy TabPro 8.4 எனும் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த டேப்லட் ஆனது 8.4 அங்குல அளவும், 2560 x 1600 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 2.3Ghz வேகத்தில் செயற்படவல்ல Quad Core Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் 16GB அல்லது 32GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ளதுடன், 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment