Showing posts with label Android. Show all posts
Showing posts with label Android. Show all posts

Friday, February 16, 2018

மீண்டும் முன்னணியில் நோக்கியா கைப்பேசிகள்

சில வருடங்களுக்கு முன்னர் நோக்கியா கைப்பேசிகளுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது.

எனினும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் வீழ்ச்சியை எதிர்நோக்க தொடங்கியது.

அன்ரோயிட் கைப்பேசிகளின் வரவும் வீழ்ச்சிக்கு மற்றுமொரு காரணமாக விளங்கியது.

எனினும் மீண்டும் நோக்கியா நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளத்தினை உள்ளடக்கியதாக ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்ய தொடங்கியது.

இவ்வாறு அறிமுகம் செய்ய ஆரம்பித்து ஓரிரு வருடங்களுக்குள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.


இதனை எடுத்துக்காட்டும் விதமாக கடந்த 2017ம் ஆண்டின் நான்காம் கலாண்டுப் பகுதியில் ஏனைய முன்னணி நிறுவனங்களின் கைப்பேசிகளின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக நோக்கியா கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை காணப்படுகின்றது.


அதாவது HTC, Sony, Google, Alcatel, Lenovo, OnePlus, Gionee,Meizu,Coolpad,Asus ஆகிய நிறுவனங்களை கைப்பேசி விற்பனையில் பின்னுக்கு தள்ளியுள்ளது.

மேற்கண்ட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 4.4 மில்லியன் கைப்பேசிகளை நோக்கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

8K, Chromecast உட்பட மேலும் பல வசதிகளுடன் அறிமுகமாகும் VLC 3.0 மீடியோ பிளேயர்

வருமானம் ஈட்டுவதை நோக்கமாக கொண்டிராத நிறுவனமான VideoLAN இனால் VLC மீடியா பிளேயர் உருவாக்கப்பட்டுள்ளது.
இப் பிளேயரின் புதிய பதிப்புக்களை காலத்திற்கு காலம் அந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.









இந்நிலையில் தற்போது VLC 3.0 எனும் பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.இதில் 8K எனப்படும் மிகவும் துல்லியம் வாய்ந்த வீடியோக்களை பார்த்து மகிழ முடியும்.




VLC 3.0.0 playing 8k60 on Windows 10 using i7 GPU from VideoLAN on Vimeo.




அத்துடன் கூகுளினால் அறிமுகம் செய்யப்பட்ட Chromecast சேவையினையும் இப் பிளேயரில் பெற்றுக்கொள்ள முடியும்.பலதரப்பட்ட சப் டைட்டில்ஸ், ப்ளூ றே மீள்பதிவு என மேலும் பல வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.


அத்துடன் முதன்முறையாக Windows, OS X, Linux, Android, iOS, Windows Phone மற்றும் RT ஆகிய இயங்குதளங்களுக்காக ஒரே தடவையில் VLC மீடியா பிளேயரின் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, March 23, 2014

மாதந்தோறும் மில்லியன் கணக்கான பயனர்களை கவர்ந்திழுக்கும் WeChat

இலகுவானதும், விரைவானதுமான மொபைல் தொடர்பாடலுக்கு உதவும் WeChat மற்றும் WhatsApp அப்பிளிக்கேஷன்களுக்கிடையே பலத்த போட்டி நிலவுகின்றது.
WhatsApp அப்பிளிக்கேஷனை பேஸ்புக் நிறுவனம் 16 பில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்ததன் பின்னர் மாதந்தோறும் 450 மில்லியன் பயனர்கள் பயன்படுத்திவருகின்றனர்.
இதேவேளை WeChat அப்பிளிக்கேஷனும் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் மாதாந்த பாவனையாளர்களை 355 மில்லியன் பயனர்களை கவர்ந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thursday, March 13, 2014

இரு இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசி உற்பத்தியில் நோக்கியா



உலகத் தரம் வாய்ந்த கைப்பேசிகளை உற்பத்தி செய்து அறிமுகம் செய்யும் நிறுவனமான நோக்கியா தற்போது இரண்டு இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் களமிறங்கியுள்ளது.
இப்புதிய கைப்பேசி Android மற்றும் Windows Phone இயங்குதளங்களைக் கொண்டதாக வெளிவரவிருப்பதுடன் பயனர்கள் தாம் விரும்பிய இயங்குதளத்தில் கைப்பேசியினை இயக்க முடியும்.
இதேவேளை Karbonn நிறுவனமும் Android மற்றும் Windows இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசி உற்பத்தி தொடர்பான மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளதுடன் அதன் கைப்பேசி இன்னும் 6 மாதங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Wednesday, March 12, 2014

android apps அனைத்தும் உங்கள் கணணியில் பயன்படுத்துவது எப்படி?

உங்கள் கணனியில் BlueStacks முலம் android apps அனைத்தையும்  பயன்படுத்த  முடியும். இதனை Windows 7/8/8.1 & MAC OSX இலகுவாக பயன் படுத்தலாம்.


முதலில் Whats apps எப்படி install செய்வது பார்போம்....

Step 1:
BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Step 2:
இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.

Step 3:

உங்கள் Google account  Sign in பண்ணுங்கள்.


Step 4:
"Search"என்பதனை click பண்ணுங்கள்...
Step 5:
Install என்பதனை click செய்யுங்கள் ...

இனி உங்கள் Android Apps பயன்படுத்த உங்கள் Android Phone - ஐ பயன்படுத்த தேவையில்லை. கணணி இருந்தால் மட்டுமே போதும்........ 


அதே போன்று உங்களுக்கு கணணியில் WhatsApp மற்றும் ஏனைய Appsனை பயன்படுத்த முடியும்.........



Monday, March 10, 2014

அன்ரோயிட் சாதனங்களுக்கான Opera உலாவியின் புதிய பதிப்பு வெளியீடு



கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மொபைல் சாதனங்களில் நிறுவி பயன்படுத்துவதற்கான தனது உலாவியின் புதிய பதிப்பினை வெளியிட்டது Opera.
இப்புதிய பதிப்பானது அன்ரோயிட் 4.0 மற்றும் அதற்கு பிந்திய பதிப்புக்களில் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது.
இந்த உலவாவயினூடாக நேரடியாகவே வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பது விசேட அம்சமாகும்.
இதனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.