சில நேரங்களில் உங்கள் Facebook இல் நண்பர்களின் எண்ணிக்கை வழமையை விட குறைந்து காணப்படலாம் இதற்குக் காரணம் உங்கள் நண்பர்கள் உங்களை தங்கள் Friend List இல் இருந்து நீக்கியதே ஆகும்.
எந்த நண்பர் உங்களை நீக்கினார் என்று கண்டுபிடிப்பது மிகக் கடினமாகும். இதற்கு உதவுவது தான் Unfriend Finder என்ற இந்த சிறிய Script
ஆகும்.
Unfriend Finder மூலம்Facebook இல் இருந்து உங்களை யார் நீக்கியது, நீங்கள் அனுப்பிய Friend Request ஐ யார் இன்னும் Accept பண்ணாமல் இருக்கிறார்கள் மற்றும் யார் நீங்கள் அனுப்பிய Friend Request ஐ Ignoreபண்ணியது போன்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்
முதலில் நீங்கள் கீழ் உள்ள சுட்டியில் இருந்து Unfriend Finder என்ற சிறிய Script ஐ Download செய்து உங்கள் இணைய உலாவியில் நிறுவிக் கொள்ளுங்கள். (இது Firefox, Chrome, Safari, Opera போன்ற உலாவிகளுக்குமட்டும் பொருந்தும்.)
Mozilla Firefox இல் நிறுவுவதற்கு நீங்கள் முதலில் Greasemonkey என்ற Add-ons ஐ நிறுவ வேண்டும். அதன் பின்னே கீழுள்ள சுட்டியில் இருந்து தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.
- Unfriend Finder ஐ தரவிறக்க: http://www.unfriendfinder.fr/help/download
பின் உங்கள் Facebook ஐ Login பண்ணவும். அப்போது மேல் உள்ள படத்தில் காட்டியவாறு Unfriends என்ற புதிய Option ஆனது உங்கள் Facebook இல் காணப்படுவதை அவதானிப்பீர்கள்.
இனி யாராவது நண்பர்கள் உங்களை தங்கள் Friend List இல் இருந்து அகற்றினால் உங்களுக்கு Notifications வரும்.
0 comments:
Post a Comment