Showing posts with label Facebook. Show all posts
Showing posts with label Facebook. Show all posts

Wednesday, February 21, 2018

Smart Speaker சாதனத்தினை அறிமுகம் செய்யும் Facebook

Apple நிறுவனம் Home Port எனும் சாதனத்தினையும், Amazon நிறுவனம் Alexa சாதனத்தினையும், Google நிறுவனம் Google Home எனும் சாதனத்தினையும் அறிமுகம் செய்துள்ளன.

இவற்றின் வரிசையில் Facebook நிறுவனம் Smart Speaker எனும் சாதனத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.

இலத்திரனியல் சாதனங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் Digitimes இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

July மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இச் சாதனமானது 15 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இதன் ஏனைய சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Sunday, August 10, 2014

பேஸ்புக்கில் தானாக ப்ளே ஆகும் வீடியோவை நிறுத்த வேண்டுமா?

Facebook தளத்தில் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களின் படி உங்கள் Facebook கணக்கிற்கான முகப்புப் பக்கத்தில் (News Feed) பகிரப்படும் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே தேவையற்ற வீடியோ கோப்புக்களும் இவ்வாறு இயங்குவதனால் எமது தரவுப்பாவனை அதிகரிக்க வாய்ப்புண்டு. மேலும் இது சிலருக்கு சங்கடமாகக் கூட அமையலாம்.
எனவே இந்த வசதி உங்களுக்கு தேவையற்றது என நீங்கள் கருதினால் இதனை முடக்கிக் கொள்ளும் வசதியும் facebook தளத்தில் தரப்பட்டுள்ளது.
இவ்வாறு தானாக இயங்கும் வீடியோ கோப்புக்களின் செயற்பாட்டை நிறுத்திக் கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறையை பின்பற்றுக.


❶ முதலில் உங்கள் Facebook கணக்கிற்குள் நுழையுங்கள்.

❷ பின் கீழுள்ள இணைப்பை சுட்டுங்கள்.
====> http://j.mp/FacebookVideoSetting-TAMILINFOTECH


❸ பின் Auto-Play Videos என்பதற்கு நேரே இருக்கும் Drop Down Menu இல் Off என்பதனை தெரிவு செய்க.
அவ்வளவு தான்.
இனி வீடியோ கோப்புக்கள் இயக்கினால் மாத்திரமே இயங்கும்.
.
.
.
.
.
★ மேற்குறிப்பிட்ட இணைப்பை சுட்டும் போது Auto-Play Videos என்ற ஒன்று தோன்றவில்லை எனின் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்கும் வசதி இன்னும் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கமாட்டாது.

★ மேற்குறிப்பிட்ட முறை கணனி மூலம் முகநூலை பயன்படுத்துபவர்களுக்கே பொருந்தும்.

★ நீங்கள் Smart சாதனங்களுக்கான Facebook Application மூலம் facebook தளத்தை பயன்படுத்துபவர் எனின் இதனை குறிப்பிட்ட மென்பொருளின் Setting பகுதியினூடாக மாற்றிக்கொள்ளவும் முடியும்.

Saturday, June 1, 2013

பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக்ரோசொப்ட்



பேஸ்புக்கை தாக்கும் புதிய வகை ட்ரொஜன் ஹோர்ஸ் வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளதால் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. 'Trojan:JS/Febipos' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தன்னியக்கமாக Like, Comment மற்றும் Share செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. தற்போது பிரேஸில் மொழியில் பிரேசில் நாட்டில் அதிகளவில் வியாபித்துள்ள இந்த வைரஸ் ஐரோப்பா நாடுகளுக்கும் விரைவில் ஆங்கில மொழியிலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Firefox, Chrom போன்ற இணைய உலாவிகளின் Plug-ins என்ற போர்வையிலேயே இந்த வைரஸ் பரவுவதாகவும் குறித்த வைரஸ் தாக்கிய கணனியின் மூலம் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் அதிலிருந்து ஓரளவு தப்பிக்கவும் சில வழிகளைக் கூறியுள்ளது. 



அதாவது தரவேற்றம் செய்யக் கூறி புதிதாக Firefox, Chrom ஊடாக வரும் Plug-insகளை தவிர்த்தல் மேலும் பேஸ்புக்கினைப் பயன்படுத்திவிட்டு முறைப்படி அதிலிருந்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. இதேவேளை இந்த வைரஸ் விரைவில் பிரேஸில் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கும் பல மொழிகளில் பரவலடையும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகின்றது

Tuesday, July 17, 2012

பேஸ்புக் வழியே கடந்த கால நினைவுகள்


பேஸ்புக் சுவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் விவ‌ரங்களை உங்கள் வாழ்க்கை கல்வெட்டுக்கள் என்று எப்போதேனும் நினைத்ததுண்டா?
அப்படி நினைக்க வைக்ககூடிய அருமையான இணையதளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
பாஸ்ட் போஸ்ட்ஸ் என்னும் அந்த தளம் பேஸ்புக் மூலம் உங்கள் க‌டந்த காலத்தை திரும்பி பார்க்க உதவுகிறது.
அதாவது சென்ற வருடம் இந்த நாளில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நினைத்து பார்க்க வைக்கிறது பாஸ்ட் போஸ்ட்ஸ்.
வரலாற்றில் இன்று என்று சில நாளிதழ்களும் தொலைகாட்சிகளும் கடந்த கால நிகழ்வுகளை தொகுத்தளிக்கின்றன‌ இல்லையா,அதே போல உங்கள் வாழ்க்கையிலும் கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை திரும்பி பார்க்க நினைவில் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த தளம்.
கடந்த ஆண்டு இதே நாளின் என்ன செய்தீர்கள் என்று நினைவில் உள்ளதா என்று கேள்வி எழுப்பி அதற்கான பதிலை சுவாரஸ்யமான வழியில் முன்வைக்கிற‌து இந்த தளம்.
பேஸ்புக் பயனாளிகள் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும் செயல்களையும் பேஸ்புக் சுவர் வழி செய்திகளாக பகிர்ந்து கொள்கின்றனர் அல்லவா?இவற்றை ஒருவரது வாழ்க்கை பதிவின் கல்வெட்டுக்களாக கருதி தினம் ஒரு செய்தியாக இமெயில் மூலம் பயனாளிகளுக்கு அனுப்பி வைக்கிறது பாஸ்ட் போஸ்ட்ஸ்.
இந்த தளத்தில் உறுப்பினரான பின் ஒருவரது பேஸ்புக் சுவர் பதிவுகளில் இருந்து கடத்த கால பதிவுகளில் இருந்து கடந்த ஆண்டு அதே நாளில் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் தேர்வு செய்து இமெயில் மூலம் அனுப்படுகிற‌து.
பேஸ்புக்கில் எல்லோரும் பகிர்ந்து கொள்கின்ற‌னரே தவிர அந்த பதிவுகளை பலரும் திரும்பி பார்ப்பதில்லை.அந்த வசதியை தான் புதுமையான முறையில் இந்த தளம் வழங்குகிறது.
இந்த தளம் மூலம் கடந்த ஆண்டு இதே நாளில் என்ன செய்து கொண்டிருந்தோம் என அறிந்து கொள்ள முடிவது பயனாளிகளுக்கு புதிய அனுபவமாகவே இருக்கும்.டைரியை புரட்டி பார்ப்பது போல பேஸ்புக் வழியே தங்கள் வாழ்க்கை பிளேஷ்பேக்கில் மூழ்கலாம்.
பேஸ்புக் அனுபவத்தை மேலும் பட்டை தீட்டும் வகையில் பேஸ்புக் சார்ந்து பல்வேறு தளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.அவற்றில் மிகவும் சுவாரஸ்யமானதாக இதனை கருதலாம்.
பேஸ்புக்கின் செல்வாக்கை மீறி அதன் பயன்பாடு குறித்து பல்வேறு விமர்சன‌ங்களும் இருக்கின்றன.ஆனால் பேஸ்புக் வெறும் பொழுதுபோக்கு அல்ல என்பதை இது போன்ற தளங்கள் உணர்த்தி வருகின்ற‌ன.
இணையதள முகவரி;http://pastposts.com/

உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி


உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி

நீங்கள் பேஸ்புக் (www.facebook.com) தளத்தில் உறுப்பினரா , தினமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக் மூலம் அரட்டை அடிப்பீர்களா , அப்படியாயின் இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் . பல்வேறு தரப்பட நிரலிகள் ( facebook  applications  ) மூலம் பேஸ் புக் கணக்குகள் ஹாக்கர்களால் (hacker) முடக்கப்படுகின்றன
இது போன்ற நிரலிகள்  பேஸ் புக் சமூகத்தளத்தில் ஏகப்பட்ட பயனர்களின் கணக்குகளை கபளீகரம் செய்திருக்கின்றன .சில  ஹாக்கர்கள்  கடவுச் சொல்லை திருடி உங்கள் பயனர் படத்தில் (Profile Picture) ஆபாசமான அல்லது மற்றவர்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் படங்கள் / தகவல்களை மாற்றி விடுவர் . இதுபோன்ற சிக்கல்களை கவனத்தில் கொண்டு பேஸ் புக் Account  notification  என்னும்  வசதியை தன்னுள்ளே கொண்டுள்ளது .


இந்த வசதியை நீங்கள் செயல் பட வைப்பதின் மூலம் , நீங்கள் உபயோகிக்கும் கணினி தவிர்ந்து வேறு ஏதும் கணினி / செல்பேசி மூலம் யாரவது உங்கள் பேஸ்புக் பயனர் கணக்கில் நுழைந்தால் அடுத்த நொடியே உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அல்லது உங்கள் செல்பேசிக்கு SMS மூலமாக தகவல் தெரிவிக்கப்படும் . தகவல் தெரிந்த அடுத்த  நொடியே உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து உங்கள் கடவுச்சொல்லை மாற்றி விடுவதின் மூலம் எவ்விதமான ஹாக்கர்களிடம் இருந்தும் உங்கள் பேஸ் புக் கணக்கை எளிதாகப் பாதுகாத்துக் கொள்ளலாம். இதனை செயல் படுத்துவது எவ்வாறு என்பதை கீழே உள்ள படங்கள் மூலம் அறியலாம் .

#உங்கள் பயனர் கணக்கில் நுழைந்த பின் Account  > Account Settings  குச் செல்லவும்.

  •  ( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )




#அங்கே ஏழாவதாக இருக்கும் Account  settings  குச் செல்லவும் .

  •  அதன் கீழ் Login  Notifications மெனுவில் On  பட்டனை  அழுத்தி சேவ் செய்து    கொள்ளுங்கள் .
  •  ( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )





இனி யாரவது உங்கள் கணக்கில் உங்களுக்குத் தெரியாமல் நுழைய முனைந்தால் அது குறித்த தகவல் தானாக உங்கள் மினஞ்சல் / அல்லது குறுஞ்செய்தி மூலம் வந்து சேரும் .
பயனர் கணக்கில் அது மீறி யாரவது நுழைந்தால் பேஸ் புக் அனுப்பும் மாதிரி எச்சரிக்கை செய்தி  கீழே .
( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )

இந்தத் தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் தமிழ்10  மற்றும் இன்ட்ல்லிளில் உங்கள் ஓட்டை செலுத்தவும் .

Saturday, July 7, 2012

Facebook இல் உங்களை தங்கள் Friend List இருந்து அகற்றிய நண்பர்களைக் கண்டுபிடிப்பது எப்படி?



சில நேரங்களில் உங்கள் Facebook இல் நண்பர்களின் எண்ணிக்கை வழமையை விட குறைந்து காணப்படலாம் இதற்குக் காரணம் உங்கள் நண்பர்கள் உங்களை தங்கள் Friend List இல் இருந்து நீக்கியதே ஆகும்.

எந்த நண்பர் உங்களை நீக்கினார் என்று கண்டுபிடிப்பது மிகக் கடினமாகும். இதற்கு உதவுவது தான் Unfriend Finder என்ற இந்த சிறிய Script
ஆகும்.


Unfriend Finder மூலம்Facebook இல் இருந்து உங்களை யார் நீக்கியது, நீங்கள் அனுப்பிய Friend Request ஐ யார் இன்னும் Accept பண்ணாமல் இருக்கிறார்கள் மற்றும் யார் நீங்கள் அனுப்பிய Friend Request ஐ Ignoreபண்ணியது போன்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்


முதலில் நீங்கள் கீழ் உள்ள சுட்டியில் இருந்து Unfriend Finder என்ற சிறிய Script ஐ Download செய்து உங்கள் இணைய உலாவியில் நிறுவிக் கொள்ளுங்கள். (இது Firefox, Chrome, Safari, Opera போன்ற உலாவிகளுக்குமட்டும் பொருந்தும்.)



Mozilla Firefox இல் நிறுவுவதற்கு நீங்கள் முதலில் Greasemonkey என்ற Add-ons ஐ நிறுவ வேண்டும். அதன் பின்னே கீழுள்ள சுட்டியில் இருந்து தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.


பின் உங்கள் Facebook ஐ Login பண்ணவும். அப்போது மேல் உள்ள படத்தில் காட்டியவாறு Unfriends என்ற புதிய Option ஆனது உங்கள் Facebook இல் காணப்படுவதை அவதானிப்பீர்கள்.

இனி யாராவது நண்பர்கள் உங்களை தங்கள் Friend List இல் இருந்து அகற்றினால் உங்களுக்கு Notifications வரும்.